அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அரசு விலை இல்லா பாடப்புத்தகங்களை வழங்கி வருகிறது. 10, 11 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு வருடம் முழுவதுக்கும் உரிய பாடப்புத்தகங்கள் ஒரே சமயத்தில் வழங்கப்படுகின்றன.
மாணவர்களுக்கு வழங்கப்படும் பாடப்புத்தகங்கள் அதிக சுமையுடன் இருப்பதால் 1-வது வகுப்பு முதல் 9-வது வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் பிரித்து வழங்கப்படுகிறது. காலாண்டு தேர்வு வரை முதல் பருவ பாடப்புத்தகங்களும், அரையாண்டு தேர்வு வரை 2-வது பருவ பாடப்புத்தகங்களும், முழு ஆண்டு தேர்வு வரை 3-வது பருவ பாடப்புத்தகங்களும் வழங்கப்படுகின்றன. ஏற்கனவே முதல் பருவத்திற்கு உரிய பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு மாணவ-மாணவிகள் காலாண்டு தேர்வு எழுத உள்ளனர்.
காலாண்டு தேர்வு 25-ந் தேதி முடிவடைகிறது. 26-ந் தேதி முதல் அக்டோபர் 4-ந் தேதி வரை பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறையாகும். அக்டோபர் 5-ந் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அன்றே மாணவ-மாணவிகள் அனைவருக்கும் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவிட்டுள்ளார்.
இதையொட்டி தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குனர் மைதிலி ராஜேந்திரன், செயலாளர் கார்மேகம் ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்வி மாவட்ட அளவிலான குடோன்களுக்கு 3-வது பருவத்திற்கு உரிய 1 கோடியே 33 லட்சம் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை அனுப்பி உள்ளனர். அந்த புத்தகங்கள் பள்ளிக்கூடங்களுக்கு விரைவில் அனுப்பிவைக்கப்பட உள்ளன.
பாடப்புத்தகங்கள் சரியாக அக்டோபர் 5-ந் தேதி கண்டிப்பாக மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களை வழங்க அனைத்து மாவட்டங்களில் உள்ள முதன்மை கல்வி அதிகாரிகளும், மாவட்ட கல்வி அதிகாரிகளும் தயாராக உள்ளனர். அக்டோபர் 5-ந் தேதி அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.
No comments:
Post a Comment