தமிழ்நாட்டில் 22 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.
நல்லாசிரியர் விருது
மத்திய அரசு சார்பில் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.
ஆசிரியராக இருந்து ஜனாதிபதியாக உயர்ந்த டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் நினைவை போற்றும்விதமாக ஆண்டுதோறும் நாடுமுழுதும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
இவ்விருது பெற 20 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி இருக்க வேண்டும். சமுதாயத்தில் ஒழுக்கமானவராகவும், புகழ்மிக்கவராகவும் இருத்தல் வேண்டும். மாணவர்களிடத்தில் அன்பு மிக்கவராகவும், சமுதாய நலனில் பங்கு கொள்பவராகவும் இருத்தல் வேண்டும்.
வெள்ளிப்பதக்கம்
மாநில அரசு நல்லாசிரியர் பட்டியலை தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்புகிறது. இறுதியாக விருதுக்குரியவர்களை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ் உள்ள கல்வி அமைச்சகம் தேர்வு செய்கிறது.
ஆசிரியர் தினமான செப்டம்பர் 5–ந் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் இந்த விருது வழங்கப்படுகிறது.
25 ஆயிரம் ரூபாய் ரொக்கம், வெள்ளிப் பதக்கம், நற்சான்றிதழ் ஆகியவை விருதுபெற்ற ஆசிரியர்களுக்கு வழங்கப்படும், தமிழகத்தில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் 22 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
அவர்களுக்கு, வாழ்நாள் முழுவதும் ரெயிலில் இலவசமாக பயணிக்கும் சலுகையும் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான
தேசிய நல்லாசிரியர் விருது பெறும் தமிழக ஆசிரியர்கள் விவரம் வருமாறு:–
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்
எஸ்.அமலோற்பவம், தலைமை ஆசிரியை, செயிண்ட் ஜான் நடுநிலைப்பள்ளி, ராயப்பேட்டை, சென்னை.
எம்.செல்வகுமார், தலைமை ஆசிரியர், ராஜரிஷி அர்த்தநாரீச வர்மா தொடக்கப்பள்ளி, ராயபுரம், சென்னை.
ஆர்.தாஸ், தலைமை ஆசிரியர், பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, திருவள்ளூர்.
எஸ்.சுவர்ணாபாய், தலைமை ஆசிரியை, மீஞ்சூர் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளி, மணலி, சென்னை.
வி.கணேசன், தலைமை ஆசிரியர், பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, காஞ்சீபுரம்.
டி.ஏகாம்பரம், தலைமை ஆசிரியர், பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, கீழமணக்குடி, கடலூர்.
என்.பாலசுப்பிரமணியன், தலைமை ஆசிரியர், பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, பந்தநல்லூர்.
ஆர்.விஜயலலிதா, தலைமை ஆசிரியை, பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி, நரிக்காட்டியூர், கரூர்.
கே.சிற்றம்பலம், தலைமை ஆசிரியர், பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, இடையப்பட்டி, புதுக்கோட்டை.
எஸ்.காளிமுத்து, தலைமை ஆசிரியர், பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, திண்டுக்கல்.
ஏ.ஜோசபைன் செல்வமேரி, தலைமை ஆசிரியை, ராஜபரமேஸ்வரி நடுநிலைப்பள்ளி, அண்ணா நகர், மதுரை.
பி.தனராஜ், தலைமை ஆசிரியர், பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, பொன்னம்பாளையம், சேலம்.
டி.ராணி சிவகாமி, தலைமை ஆசிரியை, பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி, சூண்டி, நீலகிரி.
டி.எஸ்.அன்பு ஹெப்சிபாய், தலைமை ஆசிரியை, டி.என்.டி.டி.ஏ. நடுநிலைப்பள்ளி, தூத்துக்குடி.
எஸ்.பொன்ராஜ், தலைமை ஆசிரியர், சி.எம்.எஸ். மேரி ஆர்டென் நடுநிலைப்பள்ளி, பாளையங்கோட்டை.
மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள்
என்.ராமச்சந்திரன், உடற்பயிற்சி ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, கள்ளக்குறிச்சி.
வி.ஹரிமூர்த்தி, தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, திருத்துறையூர், கடலூர்.
எல்.பிரான்சிஸ் சேவியர், தலைமை ஆசிரியர், செயிண்ட் ஜோசப் கல்லூரி மேல்நிலைப்பள்ளி, திருச்சி.
பி.ஜார்ஜ்பவுல், துணை தலைமை ஆசிரியர், டான் பாஸ்கோ மெட்ரிகுலேசன் பள்ளி, எழும்பூர், சென்னை.
பி.தனபால், முதுநிலை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, குமணன் குட்டை, ஈரோடு.
தங்கபிரகாஷ், தலைமை ஆசிரியை, சன்பீம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மேட்டுக்குளம், வேலூர்.
வி.பழனியப்பன், முதல்வர், சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வெண்ணெய்மலை, கரூர்.
இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment