ஓலைச்சுவடிகள் நூலாக மாற்றம்: புதுச்சேரி சமஸ்கிருத ஆராய்ச்சியாளர் குடியரசுத் தலைவர் விருதுக்கு தேர்வு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, September 5, 2015

ஓலைச்சுவடிகள் நூலாக மாற்றம்: புதுச்சேரி சமஸ்கிருத ஆராய்ச்சியாளர் குடியரசுத் தலைவர் விருதுக்கு தேர்வு

ஓலைச்சுவடிகளை கண்டறிந்து அவற்றை நூலாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றும் சமஸ்கிருத ஆய்வாளர் தேவி பிரசாத் மிஸ்ரா(42), குடியரசுத் தலைவர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி பிரெஞ்ச் ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றும் தேவி பிரசாத் மிஸ்ராவுக்கு, சமஸ்கிருத மொழி மற்றும் இலக்கிய பணிக்காக குடியரசுத் தலைவர் விருது வழங்கப்பட உள்ளது. சான்றிதழ், நினைவுப்பரிசு மற்றும் ரூ. 1 லட்சம் ரொக்கப்பரிசு ஆகியவை இதில் அடங்கும்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது: விருதுக்கு தேர்வு செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது சொந்த ஊர் ஒடிசா. புதுச்சேரியில் கடந்த 1999-ம் ஆண்டு முதல் வசித்து வருகிறேன். ஒலைச்சுவடியை தேடி கண்டறிந்து அதை படித்து பார்ப்பது மிகவும் பிடிக்கும். அதையொட்டியே எனது பணி அமைந்தது.

சூரியனின் நூறு ஸ்லோகங்கள் தொடர்பாக முதல் நூல் வெளியானது. அதையடுத்து சிவன் ஸ்லோகங்கள் தொடர்பாக அடுத்த நூல் வெளியானது.

ராமன் தொடர்பான பழங்கால ஓலைச்சுவடியை நூலாக்கியுள்ளேன். தொடர்ந்து ஓலைச்சுவடி பணிகளில் ஈடுபட்டுள்ளதால் இவ்விருதுக்கு தேர்வாகியுள்ளேன்.

அடுத்த ஆண்டு ஜனவரி 26-ம் தேதி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருது தர உள்ளதாக மத்திய அரசிடமிருந்து கடிதம் வந்துள்ளது" என்றார்.

No comments:

Post a Comment