செல்போனில் பேசி கொண்டிருக்கும் போது திடீரென லைன் துண்டிக்கப்பட்டால் கட்டணம் கூடாது - டிராய் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, September 6, 2015

செல்போனில் பேசி கொண்டிருக்கும் போது திடீரென லைன் துண்டிக்கப்பட்டால் கட்டணம் கூடாது - டிராய்

டிராய் அதிரடி

செல்போனில் பேசி கொண்டிருக்கும் போது திடீரென லைன் துண்டிக்கப்பட்டால் அதற்குரிய கட்டணத்தை வசூலிக்க கூடாது என்று இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) அறிவித்துள்ளது.

செல்போனில் பேசிக்கொண்டிருக்கும்போதே, சிக்னல் கோளாறு காரணமாக பேசுவதில் தடை ஏற்படுவது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நிகழும் ஒன்றாக இருக்கிறது. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவி வருகிறது.அண்மையில், இந்தப் பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வு காணமாறு பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார்.இது குறித்து பல்வேறு கட்ட ஆய்வுகளை டிராய் மேற்கொண்டது. அதன் அடிப்படையில், தனது பரிந்துரை அறிக்கையை டிராய் அளித்துள்ளது.அந்த அறிக்கையில், ” செல்போனில் ஒருவர் பேசி கொண்டிருக்கும் போது, திடீரென தடை ஏற்பட்டால் கட்டணம் வசூலிக்க கூடாது. அதன் தடையை ஈடு செய்ய இலவசமாகக் கூடுதல் நேரத்தை ஒதுக்க வேண்டும், அல்லது கட்டணத்தைத் திருப்பி செலுத்திவிட வேண்டும். அழைப்பு வந்த முதல் 5 விநாடிகளிலேயே தடைபட்டால் அந்த அழைப்புக்கு, கட்டணம் வசூலிக்கக் கூடாது” என பல்வேறு முக்கிய பரிந்துரைகளை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment