சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசு, உதவிபெறும், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயிலும் சிறுபான்மையின மாணவர்கள், மாணவிகள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலானோர் செப்டம்பர் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ்2 வரையிலும், பி.எச்.டி., தொழில்நுட்பக் கல்வி, இதர கல்வி பயிலும் மாணவர்கள் இணையதளத்தில் அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது என ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment