சத்துணவு மாணவர்கள் கணக்கெடுப்பு துவக்கம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, September 10, 2015

சத்துணவு மாணவர்கள் கணக்கெடுப்பு துவக்கம்


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியர் குறித்த கணக்கெடுப்பு துவங்கி உள்ளது.இதுதொடர்பாக சத்துணவு துறை அதிகாரிகள் கூறியதாவது:

ரூ.2 கோடிதமிழகத்தில், 43 ஆயிரம் பள்ளிகளில், சத்துணவு கூடங்கள் உள்ளன. கடந்த கல்வி ஆண்டில், 5.40 லட்சம் மாணவ, மாணவியர் சத்துணவு சாப்பிட்டனர்.சத்துணவுக்காக மாதம்தோறும், 2 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இச்செலவை கட்டுப் படுத்தவும், உணவு வீணாகாமல் தடுக்கவும், சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியரின் குறித்த கணக்கெடுப்பு, ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் நடக்கும். இதன் மூலம்,இடைநிறுத்தம், புதிய மாணவர் சேர்க்கை போன்ற விவரங்கள் சேகரிக்கப்படும். பள்ளி கல்வித்துறை மூலம் நடத்தப்படும், இந்த கணக்கெடுப்பு சத்துணவுத்துறைக்கு அனுப்பப்படுகிறது.கட்டுப்படுத்தப்படும்அதன் அடிப்படை யில், சத்துணவு செலவு கட்டுப்படுத்தப்படுகிறது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.முட்டை முதல் பிரியாணி வரைசத்துணவில் முதல் மற்றும், மூன்றாவது வாரத்தில், திங்கள் - வெஜ் பிரியாணி, முட்டை; செவ்வாய் - கொண்டக்கடலை புலாவ், முட்டை; புதன் - தக்காளி சாதம், முட்டை; வியாழன் - சாம்பார் சாதம், முட்டை; வெள்ளி - கருவேப்பிலை அல்லது கீரை சாதம், முட்டை.இரண்டாவது மற்றும், நான்காவது வாரத்தில் பிசிபேளாபாத், மசாலா முட்டை; மீல் மேக்கர், முட்டை; புளி சாதம், தக்காளி முட்டை; எலுமிச்சை சாதம், முட்டை; சாம்பார் சாதம் உருளைக்கிழங்கு வறுவல், முட்டை வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment