நாட்டு நலப்பணித் திட்டத்திற்கான (என்.எஸ்.எஸ்.,) நடப்பாண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில் தாமதம் ஏற்படுவதால், திட்ட செயல்பாடுகளில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் 3 ஆயிரம் பேர் உள்ளனர். ஒரு யூனிட்டிற்கு 90 மாணவர் வீதம் 90 யூனிட்டுகள் செயல்படுகின்றன. படிப்பை தவிர, சமுதாயத்திற்கு சேவையாற்றும் நோக்கத்தில், விழிப்புணர்வு ஊர்வலம், கருத்தரங்கு, மருத்துவ முகாம், மரக்கன்று நடும் விழா போன்றவற்றில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவர்.
தவிர, ஆண்டிற்கு யூனிட் வாரியாக ஒரு சிறப்பு முகாமும் நடத்தப்படும். இதற்காக பின்தங்கிய கிராமம் ஒன்றை தேர்வு செய்து, அங்கு ஏழு நாட்கள் மாணவர்கள் தங்கி விழிப்புணர்வு
ஏற்படுத்துவர்.இதற்காக, ஆண்டுதோறும் ஒரு யூனிட்டிற்கு ரூ.22,250 வீதம், 90 யூனிட்டுகளுக்கு ரூ.2.25 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.
இதை மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஜூலைக்குள் அளித்துவிடும். ஆனால் இந்தாண்டிற்கு இதுவரை அந்த நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால் இரு மாதங்களாக இத்திட்ட செயல்பாடுகள் முடங்கியுள்ளன.
ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: இத்திட்டத்தால் கல்வியை தாண்டி மாணவர்களுக்கு சேவை மனப்பான்மை, தலைமை பண்பு, ஆளுமை திறன் மேம்படும். ஒவ்வொரு ஆண்டும் உரிய நேரத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால், செயல்பாடுகள் குறித்து திட்டமிடுதல் பணி சவாலாக அமைகிறது.
இந்தாண்டும் அதே பிரச்னை ஏற்பட்டுள்ளது. உரிய காலத்திற்கு முன்பே இத்திட்டத்திற்கான நிதி கிடைக்கும் வகையில் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
No comments:
Post a Comment