பொங்கல் பண்டிகையை ஒட்டி பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்க சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "வரும் 16-ம் தேதி புதுச்சேரியிலிருந்து விழுப்புரம், விருத்தாச்சலம், சேலம், ஈரோடு, திருப்பூர் மார்க்கமாக கோயமுத்தூருக்கு ரயில் எண் 06167 இயக்கப்படும். இந்த ரயில் புதுச்சேரியிலிருந்து பகல் 12.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.00 மணிக்கு கோவையை அடையும்.
17-ம் தேதியன்று கோவை சந்திப்பில் இருந்து சென்னை எழும்பூருக்கு ரயில் எண் 06168 இயக்கப்படுகிறது. இது காலை 5.30 மணிக்கு கோவையில் புறப்பட்டு மாலி 4.15 மணிக்கு சென்னை வரும். இந்த ரயில் ஈரோடு, சேலம், ஆத்தூர், விருத்தாச்சலம், விழுப்புரம், திண்டிவனம் மார்க்கமாக சென்னை வரும்.
16-ம் தேதியன்று மங்களூரு - கொச்சுவேலி இடைடே ரயில் எண் 06171 இயக்கப்படும். இந்த ரயில் 16-ம் தேதி இரவு 10 மணிக்கு கொச்சுவேலியில் புறப்பட்டு மறுநாள் காலை 11.45 மணிக்கு மங்களூரு சந்திப்பை சென்றடையும். கொல்லம், எர்ணாகுளம், திரிசூர், கோழிக்கோடு, காசர்கோடு வழியாக இந்த ரயில் பயணப்படும்.
வரும் 22-ம் தேதியன்று சென்னை சென்ட்ரல் - எர்ணாகுளம் இடையே சுவிதா அதிவிரைவு ரயில் இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.55 மணிக்கு எர்ணாகுளம் சந்திப்பை அடையும்.
இதேபோல் 24-ம் தேதி எர்ணாகுளத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு அதிவிரைவு ரயில் இயக்கப்படும். எர்ணாகுளத்தில் இரவு 7 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரலை மறுநாள் காலை 7.15-க்கு இந்த ரயில் வந்தடையும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை தொடங்குகிறது.
No comments:
Post a Comment