சத்தியமங்கலம் சாரு மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த 766 மாணவர்கள் தங்களது கட்டைவிரல் அச்சுக்களை கொண்டு தேசிய கொடியை உருவாக்கி வெள்ளிக்கிழமை உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
நாட்டின் 67-வது குடியரசு தின விழாவையொட்டி பள்ளி வளாகத்தில் உலகிலேயே அதிகமான மாணவர்கள் ஒரே சமயத்தில் கைவிரல் அச்சுக்களை கொண்டு தேசிய கொடி உருவாக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் 766 மாணவ,மாணவியர் பங்கேற்றனர். உலக சாதனை நிகழ்ச்சிகளை ஆய்வு செய்து அங்கீகாரம் வழங்கும் சிங்கப்பூர் ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமியின் இந்திய ஆய்வு அதிகாரி ஏ.கே.செந்தில்குமார், இந்தியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி நிறுவன ஆய்வாளர் பி.ஜெகநாதன் ஆகியோர் முன்னிலையில் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
இப்பள்ளியைச் சேர்ந்த 766 மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து அவர்களது கைவிரல் அச்சுக்களை கொண்டு 1.45 மணி நேரத்தில் 758 தேசிய கொடிகளை உருவாக்கினர். தேசியக் கொடியானது 1 மீட்டர் நீளமும் 0.66 மீட்டர் அகலமும் கொண்டதாக இருந்தது. இதற்காக 1 மீட்டர் நீளமுள்ள 758 துணி களும் ஆரஞ்சு, பச்சை, நீலம் மற்றும் வெள்ளை வண்ண 2300 லிட்டர் எமல்ஷன் பெயிண்டும் பயன் படுத்தப்பட்டது. உலக சாதனை விதிகளின்படி செயல்பட்டு உலகி லேயே அதிகமான நபர்கள் ஒரே சமயத்தில் கைவிரல் அச்சுக்களை கொண்டு தேசிய கொடி உருவாக்கி யதாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த கின்னஸ் சாதனைக்கான அங்கீகார கடிதத்தை கின்னஸ் ரெக்கார்ட்ஸ் அலுவலர்கள் ஏ.கே.செந்தில்குமார், பி.ஜெகநாதன் ஆகியோர் பள்ளி தாளாளர் ஏ.சாமியப்பன், முதல்வர் ருக்மணி சாமியப்பன், செயலாளர் ஏ.எஸ்.சக்திபாலாஜி, நிர்வாக இயக்குநர் பாரதிசக்தி பாலாஜி ஆகியோரிடம் வழங்கினர்.
No comments:
Post a Comment