சென்னையில் வருகிற 17–ந்தேதி 6.73 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, January 13, 2016

சென்னையில் வருகிற 17–ந்தேதி 6.73 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–கடந்த 21 வருடங்களாக அகில இந்திய அளவில் கூடுதல் போலியோ சொட்டுமருந்து முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்த ஆண்டும் 2 தவணைகளில் போலியோ சொட்டுமருந்து முகாம்கள் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் 17.01.2016 அன்றும் இரண்டாவது தவணை 21.02.2016 அன்றும் நடைபெறவுள்ளது.முதல் தவணை போலியோ சொட்டுமருந்து முகாம் நடைபெறும் நாளான 17.01.2016 அன்று சென்னை மாநகரில் 5 வயதிற்குட்பட்ட சுமார் 6.73 இலட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து கொடுப்பதற்கு 1570 சொட்டு மருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.சொட்டுமருந்து குழந்தைகளுக்கு கொடுத்தவுடன் இடது கை சுண்டுவிரலில் அடையாள மை வைக்கப்படும். எந்த ஒரு குழந்தையும் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதில் இருந்து விடுபடாமல் இருப்பதற்கு அடையாளமாக மை வைக்கப்படுகிறது. போலியோ சொட்டுமருந்து போடுவதால் எந்தவித தீங்கும் கிடையாது.ஆகவே, அனைத்து குழந்தைகளும் போலியோ சொட்டுமருந்து ஒரே நாளில் போட்டுக்கொள்வதன் மூலம், போலியோ நோய் பரவும் வைரஸ் கிருமிகள் அவர்களது ஜீரண மண்டலத்திலிருந்து அகற்றப்பட்டு அழிக்கப்படுகின்றது. இதன் மூலம் போலியோ நோயை பரப்பும் வைரஸ் கிருமிகளை சுற்றுச்சூழலிலிருந்து அறவே ஒழிக்கலாம்.போலியோ சொட்டு மருந்து முகாம் காலை 7.00 மணிக்கு தொடங்கி, இடைவெளியின்றி மாலை 5.00 மணிவரை தொடர்ந்து நடைபெறும். சொட்டுமருந்து முகாம்களில் சிறப்பாக பணி செய்ய சுமார் 6280 நபர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment