கணக்கெடுப்பு பணியால் கற்பித்தல் பாதிக்கப்படும்: ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, January 13, 2016

கணக்கெடுப்பு பணியால் கற்பித்தல் பாதிக்கப்படும்: ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி

தேர்வு நேரத்தில் கணக்கெடுப்புப் பணி ஒதுக்கப்பட்டுள்ளதால், கற்பித்தல் பணி பாதிக்கப்படுவதுடன், ஆசிரியர்களுக்குப் பணி சுமையையும் ஏற்படுத்துகிறது என அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தெரிவித்துள்ளது.

இகுறித்து அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருப்பூர் வடக்குக் கிளை நிர்வாகிகள் கூறியது:

திருப்பூரில் அனைத்து அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் தற்போது இரண்டாம் பருவத் தேர்வு திங்கள்கிழமை (ஜனவரி 11) தொடங்கியுள்ளது. இந்நிலையில், தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டில் ஆதார் எண்ணை

இணைக்கும் பணி வரும் ஜனவரி 18-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில், அனைத்து ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கும்  பணி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை (ஜனவரி 12) முதல் நடைபெற உள்ளது. அனைத்து ஆசிரியர்களுக்கும் இப்பணி வழங்கப்பட்டுள்ளதால் கற்பித்தல் பணி பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. மாணவர்களுக்கு மூன்றாம் பருவத் தேர்வுககானப் பாடங்களை விரைவாக நடத்த வேண்டிய சூழலும் உள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்ட தகவலின்படி, கணக்கெடுப்புப் பணிக்கு 14 வகையான துறையினரைப் பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ள நிலையில், ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களை மட்டும் பெருமளவில் இப்பணிக்கு பயன்படுத்துவதாக  நிர்வாகிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment