தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு மார்ச் 4-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முடிவடைகிறது.பிளஸ்-2
மாணவர்களுக்கு செய்முறை தேர்வு பிப்ரவரி 5-ந் தேதி தொடங்குகிறது. செய்முறை தேர்வை பிப்ரவரி 5-ந் தேதி முதல் பிப்ரவரி 25-ந்
தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி அனைத்து முதன்மை கல்வி
அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில் பிளஸ்-2 செய்முறை தேர்வை பிப்ரவரி மாதம் 5-ந் தேதியில் இருந்து பிப்ரவரி 25-ந் தேதிக்குள் அந்தந்த முதன்மை கல்வி
அதிகாரி விருப்பப்படி நடத்தி முடிக்கவேண்டும். செய்முறை தேர்வில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களை பள்ளி தலைமை
ஆசிரியர்கள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பிப்ரவரி 26-ந் தேதி கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment