தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜனவரி 20-ம் தேதி தொடங்குகிறது.கூட்டத்தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் வெளியிட்டார்.அதில் கூட்டத்தொடர் ஜனவரி 20-ம் தேதி காலை 10.30 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கம் போல் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறும். அதில் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. குறிப்பாக மழை வெள்ளம் உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.இந்த ஆண்டு நடைபெறும் முதல் கூட்டத் தொடர் இது. ஜனவரி 26-ம் தேதி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இந்த கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
No comments:
Post a Comment