மழை வெள்ளம் பாதிப்பு: ஆதார் அட்டை புகைப்படப்பணி மார்ச் மாதம் வரை நீட்டிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, January 11, 2016

மழை வெள்ளம் பாதிப்பு: ஆதார் அட்டை புகைப்படப்பணி மார்ச் மாதம் வரை நீட்டிப்பு

மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு துறை மூலம் ஆதார் புகைப்படம் எடுக்கும் பணி கடந்த 2011–ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கலெக்டர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உதவியுடன் இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது.அனைவருக்கும் ஆதார் அட்டை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் 5 வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் முதல் புகைப்படம் எடுத்து அட்டை வினியோகிக்கப்படுகிறது. தமிழகத்தில் 647 மையங்களில் ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.இதுதவிர சிறப்பு முகாம்கள் அமைத்தும் புகைப்படம் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் இதுவரை 6 கோடியே 37 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு ஆதார் அட்டை புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மக்கள் தொகை கணக்கெடுப்பு துறை இணை ஆணையர் கிருஷ்ணாராவ் ‘மாலைமலர்’ நிருபரிடம் கூறியதாவது:–ஆதார் புகைப்படம் எடுக்கும்பணி டிசம்பர் வரை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது மார்ச் மாதம் வரை இந்த பணி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான உத்தரவு விரைவில் வரும்.தமிழகத்தில் 6 கோடியே 37 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் 5 கோடியே 75 லட்சத்து 84 ஆயிரம் பேருக்கு கார்டு வினியோகம் செய்யப்பட்டுள்ளது. ஆதார் புகைப்படம் எடுக்கப்பட்ட பணி 88.89 சதவீதமும், கார்டு வழங்கப்பட்டது 79.82 சதவீதமும் நிறைவு பெற்றுள்ளது.சென்னையை பொறுத்த மட்டில் 84 சதவீதம் புகைப்படம் எடுக்கும் பணி நிறைவடைந்து 65 சதவீதம் பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் புகைப்படம் எடுக்கும் பணி முடிந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் மிகக்குறைந்த அளவில் 78 சதவீதமாக இடம் பெற்றுள்ளது.ஆதார் அட்டை வினியோகம் செய்யப்பட்டதில் நெல்லை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 87.51 சதவீதம் பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. குறைந்த மாவட்டமாக திருப்பூர் 64.98 சதவீதம் இடம் பெற்றுள்ளது.அதிகமான அளவு புகைப்படம் எடுக்க வேண்டிய பகுதிகளுக்கு சிறப்பு முகாம்கள் அமைத்து எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 1200 கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் தயாராக உள்ளனர். மேலும் ஆதார் அட்டையை சரிபார்க்க வீடு வீடாக ஊழியர்கள் வர உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.மழை வெள்ளப் பாதிப்புக்கு பிறகு ஆதார் அட்டை புகைப்படம் எடுக்கும் பணி தற்போது சென்னையில் சூடுபிடித்துள்ளது. கொடுங்கையூரில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில் நேற்று சிறப்பு முகாம் நடந்தது. இதில் 300–க்கும் மேற்பட்டவர்கள் ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்தனர்.இதற்கான ஏற்பாட்டினை ஆலய போதகர் அகஸ்டின் ஆண்ட்ரூஸ், செயலர் ஐசக், பொருளாளர் இஸ்ரவேல் மற்றும் கவுன்சிலர் டேவிட் ஞானசேகரன் ஆகியோர் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment