பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வுகள் ஆண்டு தோறும் டிசம்பர் மாதத்தில் நடத் தப்படுவது வழக்கம். ஆனால், தமிழகத்தில் அண்மையில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதால், டிசம்பர் மாதம் நடத்தப்படவிருந்த அரை யாண்டுத் தேர்வுகள் ஜனவரிக்கு தள்ளிவைக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை ஏற்கெனவே அறி வித்தபடி, எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2, மாணவர்களுக்கான அரை யாண்டுத் தேர்வுகள் இன்று (திங்கள்கிழமை) தொடங்கி 27-ம் தேதி வரை நடை பெறுகின்றன. இதேபோல், ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் அரையாண்டுத் தேர்வுகள் இன்று தொடங்குகின்றன.
No comments:
Post a Comment