தேர்தல் பயிற்சி அளிக்கும் அதிகாரிகளுக்கு சென்னையில் 4 நாட்கள் சிறப்பு பயிற்சி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, January 11, 2016

தேர்தல் பயிற்சி அளிக்கும் அதிகாரிகளுக்கு சென்னையில் 4 நாட்கள் சிறப்பு பயிற்சி

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் பயிற்சி அளிக் கும் அதிகாரிகளுக்கு சென்னை யில் 4 நாட்கள் சிறப்புப் பயிற்சி அளிக்க இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று வெளி யிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அரசு அதிகாரி களுக்கு தேர்தல் தொடர் பான பல்வேறு நிலையிலான பயிற்சிகள் ஏற்கெனவே தொடங் கப்பட்டுவிட்டன. இந்திய தேர்தல் ஆணையம் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த 15 உயர் அதிகாரி களுக்கு கடந்த டிசம்பர் 8 முதல் 14-ம் தேதி வரை பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த அதிகாரி கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அளவிலான 2 அதி காரிகளுக்கு சென்னையில் டிசம்பர் 21, 22-ம் தேதிகளில் தேர் தல் பயிற்சி அளித்தனர்.

இதைத்தொடர்ந்து, அடுத்த கட்டமாக ஒவ்வொரு மாவட்டத் திலும் தேர்தல் பணி தொடர்பாக 12 ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு மாவட்ட அளவிலான அதிகாரிகள் மூலமாக சென்னை, மதுரை, சேலம், திருச்சி ஆகிய 4 மண்ட லங்களில் டிசம்பர் 28 முதல் ஜனவரி 8-ம் தேதி வரை சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் அடுத்த கட்டமாக, தேர்தல் பயிற்சி அளிக்கும் மாவட்ட அதிகாரிகளின் பயிற்சித்திறனை மேம்படுத்தும் வகையில் அவர் களுக்கு சென்னையில் உள்ள அண்ணா மேலாண்மை பயிற்சி நிறு வனத்தில் 10-ம் தேதி (நேற்று) முதல் 13-ம்தேதி வரை 4 நாட்க ளுக்கு விசேஷப் பயிற்சி அளிக்க இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த பயிற்சியின்போது, மாநில, மாவட்ட மற்றும் தொகுதி அளவில் தேர்தல் பயிற்சி அளிக்கும் அதிகாரிகளின் பயிற்சித்திறன் மேம்படுத்தப்படும். சென்னையில் தொடங்கியுள்ள முதல் கட்ட பயிற்சி யில் 94 பேருக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, 2-வது கட்டமாக 49 பேருக்கு ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் ஜனவரி 19 முதல் 22-ம் தேதி வரை பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment