எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 வினா வங்கி புத்தகம் அனைத்து மாவட்டங்களிலும் நாளைமுதல் கிடைக்கும் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, January 6, 2016

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 வினா வங்கி புத்தகம் அனைத்து மாவட்டங்களிலும் நாளைமுதல் கிடைக்கும்

தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் 10–ம் வகுப்பு, 12–ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் வினா–வங்கி, மாதிரி வினா ஏடுகள் மற்றும் தீர்வு புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறது.இந்த ஆண்டு முதல் முறையாக 10–ம் வகுப்பு அறிவியல் பாடத்திற்கு மட்டும் தீர்வு புத்தகம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இது தமிழ் மற்றும் ஆங்கில வழியில் கிடைக்கும்.இதன் விலை ரூ.15. அனைத்து வினா வங்கி மற்றும் தீர்வு புத்தகங்களும் நாளை (7–ந்தேதி) முதல் விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனி, அரசு உயர்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் மகளிர் பள்ளி, சேத்துப்பட்டு எம்.சி.சி. பள்ளி, எழும்பூர் மகளிர் மாநில பள்ளிகளில் விற்பனைக்கு கிடைக்கும்.குரோம்பேட்டை – அரசு மகளிர் பள்ளி, திருவள்ளூர்–ஆர்.எம்.ஜெயின் அரசு மகளிர் பள்ளி, கடலூர் மஞ்சக்குப்பம்–அரசு மேல் நிலைப்பள்ளி.விழுப்புரம்– ராம கிருஷ்ணா வித்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர் மேம்பாலம் அரசு மேல் நிலைப்பள்ளி, நாமக்கல் பட்டினம் சி.எஸ்.ஐ. மேல் நிலைப்பள்ளி, திருவாரூர் அம்மையப்பன் அரசு மேல் நிலைப்பள்ளி.மதுரை வடக்கு லெளிஹி சேதுபதி மேல்நிலைப்பள்ளி, தேனி–என்.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்–பழனிசாலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்–ராஜா மேல்நிலைப்பள்ளி, விருது நகர்–த.பெ.ந. மகளிர் மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை– செயிண்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி.திருநெல்வேலி–ரத்னா தியேட்டர் எதிரில், அரசு மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி– லசால் மேல்நிலைப்பள்ளி, நாகர்கோவில்–அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி.வேலூர்– வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, திருவண்ணாமலை–தியாகி அண்ணாமலை பிள்ளை மேல்நிலைப்பள்ளி, சேலம்–பாரதி வித்யாலயா மேல் நிலைப்பள்ளி, நாமக்கல் ராசிபுரம்– அரசு மேல் நிலைப்பள்ளி, தருமபுரி– அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி.திருச்சி– அரசு சையது முர்துஷா மேல்நிலைப்பள்ளி, கரூர்– டாக்டர் எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் அரசு உயர்நிலைப்பள்ளி.பெரம்பலூர்–தந்தை ரோவர் மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை– பிரசாதம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளி, கோவை ராஜவீதி– அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, ஈரோடு – பன்னீர் செல்வம் பார்க் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, குன்னூர்–அண்ணா அரசு மேல் நிலைப்பள்ளி, கிருஷ்ணகிரி– அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, அரியலூர்– அரசு ஆண்கள்மேல் நிலைப் பள்ளி, திருப்பூர்– அரசு மேல் நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் புத்தகம் விற்கப்படுகிறது.

No comments:

Post a Comment