தமிழகத்தில் 6-ம் வகுப்பு கணி தப் பாடப் புத்தகத்தில் தவறுதலான ஒரு கணக்கு 3 ஆண்டுகளாக வெளியாகி வருகிறது. பிழையை நீக்குமாறு, தொடர்ந்து போராடி வருகிறார் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் ஒருவர்.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையை அடுத்த முத்தலக்குறிச் சியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலை மையாசிரியர் மரிய அமிர்தராஜ் கூறியதாவது:
6-ம் வகுப்பு கணிதப் பாடநூலில், முதல் பருவம், தொகுதி 2-ல், 27-ம் பக்கத்தில், `மீச்சிறு பொது மடங்கு’ என்ற பாடத்தில் இந்தத் தவறு உள்ளது. அதில் கேட்கப்பட்டுள்ள கேள்விக்கு, தவறான விடைகளை அதற்கு அடுத்த பக்கத்தில் வெளியிட்டு, அதற்கான தவறான விளக்கமும் வெளியிடப்பட்டுள்ளது.
தவறை திருத்தக் கேட்டு கடந்த ஏப்ரல் மாதம் முதல் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர், பாட நூல் தயாரிப்புக் குழு ஆகியோ ருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். இதுவரை எந்த பதிலும் வர வில்லை. கடந்த 2011 முதல் இதே பாடத் திட்டம் தவறாகவே வெளியாகி வருகிறது. வரும் ஆண் டுக்கான பாட நூலை இப்போது தயார் செய்வார்கள். அதில் இத்தவறை திருத்தி வெளியிடச் செய்ய வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment