சபரிமலை - அய்யப்பன் கோவிலில் நடைபெறும் முக்கிய நிகழ்வான மகர விளக்கு பூஜை நாளை நடக்கிறது. பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து கொண்டு வரப்படும் திருவாபரணங்கள் இன்று மாலை 4 மணியளவில் சரம் குத்திக்கு வந்து சேரும்.
பின்னர் மேளதாளம் முழங்க திருவாபரணங்கள் சன்னிதானத்திற்கு கொண்டு செல்லப்படும்.
மாலை 5.30 மணியளவில் வலிய நடைப்பந்தலுக்கு வரும் திருவாபரண பெட்டிகளுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்படும். தொடர்ந்து 18–ம் படிக்கு கீழ் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல் சாந்தி சங்கரன் நம்பூதிரி திருவாபரண பெட்டிகளை பெற்றுக்கொள்வார். 18–ம் படி வழியாக கருவறைக்கு கொண்டு செல்லப்படும் ஆபரணங்கள் அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட்டு மாலை 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும்.
அப்போது பொன்னம்பல மேட்டில் சாமி அய்யப்பன் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு 3 முறை காட்சி தருவது நடைபெறுகிறது. பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவாக காட்சி தரும் அய்யப்பனை காண சன்னிதானம் மட்டுமின்றி, பாரம்பரிய நடைபாதை வழிகள் பம்பை மற்றும அனைத்து மலைப்பகுதிகளிலும் லட்சக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் குவிந்துள்ளனர். அவர்கள் கூடாரம் அமைத்து பஜனை மற்றும் வழிபாடுகள் நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment