மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தேர்வை பயமின்றி எதிர்கொள்ள மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி ஆசிரியர்கள் மூலம் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, January 14, 2016

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தேர்வை பயமின்றி எதிர்கொள்ள மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி ஆசிரியர்கள் மூலம் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்கள் தேர்வை பயம் இன்றி எதிர்கொள்ள மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.மழையினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டன. மழையினால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களிலும் 33 நாட்களுக்கு மேல் பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை விடப்பட்டது. அதன் காரணமாக எப்படி தேர்வை எதிர்கொள்வது என்று அந்த மாவட்டங்களை சேர்ந்த எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 மாணவ–மாணவிகள் பலர் எண்ணுகிறார்கள்.அதன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து பின்னர் அவர்கள் மூலம் மாணவர்களுக்கு தேர்வு பயத்தை போக்க பயிற்சி அளிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை கருதியது.கடலூர் மாவட்டத்தில் பயிற்சி

அதன்படி முதல் கட்டமாக கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் 375 ஆசிரியர்களுக்கு கடந்த 2 நாட்களாக சிதம்பரத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. மாணவர்களின் மனதில் உள்ள தேர்வு குறித்த அச்சத்தை போக்குவது எப்படி என்பது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. இவ்வாறு பயிற்சி அளிப்பதால் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கடலூர் மாவட்டத்தை தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய 3 மாவட்டங்களிலும் பொங்கல் விழா முடிந்ததும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இப்படி பயிற்சி அளிப்பதால் மாணவர்களுக்கு கண்டிப்பாக தேர்வு குறித்த பயம் விலகும் என்று மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment