மருத்துவம் சார் படிப்பு இணையதளத்தில் தகவல் பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பித்தோர், தங்கள் விண்ணப்பத்தின் நிலையை, இணையதளம் வழியாக தெரிந்து கொள்ளலாம். - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, August 3, 2016

மருத்துவம் சார் படிப்பு இணையதளத்தில் தகவல் பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பித்தோர், தங்கள் விண்ணப்பத்தின் நிலையை, இணையதளம் வழியாக தெரிந்து கொள்ளலாம்.

மருத்துவம் சார் படிப்பு இணையதளத்தில் தகவல்
பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பித்தோர், தங்கள் விண்ணப்பத்தின் நிலையை, இணையதளம் வழியாக தெரிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில், பாரா மெடிக்கல் என்ற, பி.பார்ம்., - பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, ஒன்பது மருத்துவப் படிப்புகளுக்கு, அரசு கல்லுாரிகளில், 555 இடங்கள்; சுயநிதி கல்லுாரிகளில், மூன்று படிப்புகளுக்கு, 7,190 இடங்களும் உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள், அரசு மருத்துவக் கல்லுாரிகளில், ஜூலை, 25 முதல் வழங்கப்பட்டு வருகின்றன.

விண்ணப்பிக்க, ஆக., 5 கடைசி நாள். இதுவரை, 6,000 விண்ணப்பங்களுக்கு மேல், மருத்துவ கல்வி இயக்ககத்துக்கு வந்துள்ளன. இதற்கு விண்ணப்பித்தோர், தங்களின் விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என, www.tnhealth.org என்ற இணையதளத்தில், விண்ணப்ப எண்ணை பதிவு செய்து, தெரிந்து கொள்ளலாம்

No comments:

Post a Comment