எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக் கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 21-ம் தேதி தொடங்கும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு, சென்னை அண்ணாசாலை ஓமந் தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் கடந்த ஜூன் மாதம் நடந்தது. கலந்தாய்வில் சேர்க்கை ஆணை பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் 1-ம் தேதி வகுப்புகள் தொடங்கின. முதல் கட்ட கலந்தாய்வின் முடிவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 9 எம்பிபிஎஸ் இடங்கள், தனியார் (சுயநிதி) கல்லூரிகளில் மாநில அரசுக்கான 122 எம்பிபிஎஸ் இடங் கள், சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 12 பிடிஎஸ் இடங்கள் மற்றும் 17 தனியார் (சுயநிதி) பல் மருத்துவக் கல்லூரியில் மாநில அரசுக்கான 970 பிடிஎஸ் இடங்கள் மீதம் உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வை 21-ம் தேதி தொடங்க மருத்துவக் கல்வி இயக்ககம் (டிஎம்இ) திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக மாணவர் சேர்க்கைக்குழு செயலாளர் ஜி.செல்வராஜன் கூறியதாவது:
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கான இரண்டாம் கட்ட கலந் தாய்வை வரும் 21-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் ஒரு நாள் கூடுதலாக 24-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும். முதல் கட்ட கலந்தாய்வின்போது 20 அரசு மருத்துவக் கல்லூரிகள், 2 இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகள், 7 தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரிகள், சென்னையில் தமிழ் நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் 17 தனியார் (சுயநிதி) பல் மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. முதல் கட்ட கலந்தாய்வின் முடிவில் காலியாக உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் மற்றும் தற் போது அனுமதி கிடைத்துள்ள 4 தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசுக்கான எம்பிபிஎஸ் இடங்கள் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்பட உள்ளன.
அரசு கல்லூரிகளில் இருந்து 15 சதவீதம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட் டுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. அந்த இடங்கள் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றவர்களை கொண்டு நிரப்பப்பட்டு வருகிறது. அங்கு நிரப்பப்படாமல் மீதமுள்ள இடங் கள் வரும் 20-ம் தேதி திருப்பி ஒப்படைக்கப்படும். அந்த இடங் களும் இரண்டாம் கட்ட கலந்தாய் வில் நிரப்பப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
22,000 மாணவர்கள் காத்திருப்பு
அரசு மற்றும் தனியார் கல்லூரி களில் 2016-2017-ம் கல்வி ஆண்டு மாநில அரசுக்கு உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு 26 ஆயிரத்து 17 பேர் விண்ணப்பித்து இருந்தனர். தகுதியான மூன்றாம் பாலினத்தவர் ஒருவரின் விண்ணப்பம் உட்பட 25 ஆயிரத்து 379 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவர்களுக் கான தரவரிசைப் பட்டியல் வெளி யிடப்பட்டது. முதல் கட்ட கலந் தாய்வில் தேர்வாகி சேர்க்கை ஆணை பெற்றவர்கள் கல்லூரி களில் சேர்ந்துவிட்டனர். இரண்டாம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்பட உள்ள சுமார் 1,400 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 22 ஆயிரத் துக்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டியில் உள்ளனர். தனியார் மருத்துவம் மற்றும் பல் மருத் துவக் கல்லூரிகளில் மாநில அரசுக்கான இடங்கள் போக, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றவர்களை கொண்டு நிரப்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment