ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவைகள் அதிகாரப்பூர்வமாகத் துவங்கப்பட்டு விட்டன, இருந்தும் ஜியோ சிம் கார்டு கிடைக்கவில்லை என்ற புலம்பல் இருந்து வருகின்றது.
ரிலையன்ஸ் அல்லாது பல்வேறு 4ஜி கருவிகளுக்கும் ஜியோ 4ஜி சேவை நீட்டிக்கப்பட்டிருப்பதால் இதற்கான எதிர்பார்ப்பு
மற்றும் தேவை அதிகரித்திருக்கின்றது.
ஜியோ சிம் வாங்க முடியவில்லை என்றாலும் மொபைல் நம்பர் போர்டபிலிட்டி (Mobile Number Portability-MNP) ஆப்ஷன் மூலம் ஜியோ சேவையை பெற முடியும். இந்த அம்சம் ஜூலை 2015 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு நடைமுறையில் இருந்து வருகின்றது.
மொபைல் நம்பர் போர்டபிலிட்டி ஆப்ஷன் மூலம் ஏற்கனவே பயன்படுத்தும் நம்பர் கொண்டு மற்ற நெட்வர்க்களுக்கு மாறிக் கொள்ள முடியும். இந்தியா முழுக்க சுமார் 200,000 விற்பனை நிலையங்களில் ஜியோ சிம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ சேவையை உங்களது மொபைல் போன் நம்பரை மாற்றாமலேயே பெறுவது எப்படி என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்..
போர்ட்
முதலில் ‘PORT' என டைப் செய்து 1900 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும். இவ்வாறு செய்யும் போது வேறு நெட்வர்க் மாறச் செய்யும் கோரிக்கை உங்களது சார்பில் வைக்கப்பட்டு விடும்.
செயலி
பின் ‘MyJio' செயலியைக் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து ஆஃபர் கோடினை பெற வேண்டும்.
ரிலையன்ஸ்
4ஜி ஸ்மார்ட்போன், ஆஃபர் கோடு மற்றும் போர்ட் அவுட் கோடு போன்றவற்றை ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர், டிஜிட்டல் எக்ஸ்பிரஸ் மினி போன்ற விற்பனை நிலையங்களுக்குச் செல்ல வேண்டும்.
சான்று
உங்களது அடையாள சான்று, இருப்பிட சான்று மற்றும் புகைப்படம் போன்றவற்றை வழங்கி புதிய சிம் கார்டினை பெற்றுக் கொள்ள முடியும். புதிய சிம் கார்டு ஆக்டிவேட் ஆக 7 நாட்கள் ஆகும் என்பதோடு ரூ.19 வரை கட்டணம் செலுத்த நேரிடும்.
புதிய சிம்
பின் உங்களது பழைய நெட்வர்க் சிம் கார்டில் ‘No Service' தகவல் கிடைக்கும். இனி உங்களது புதிய சிம் கார்டினை பொருத்தி அதனினை பயன்படுத்தத் துவங்கலாம்.
மலிவு விலை
ஒரு முறை போர்ட் செய்த பின் அடுத்த மூன்று மாதங்களுக்கு உங்களால் வேறு நிறுவனங்களுக்கு போடர்ட் செய்ய இயலாது. ஜியோ சேவையில் அன்-லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் மலிவு விலை 4ஜி இண்டர்நெட் வழங்கப்படுகின்றது.
No comments:
Post a Comment