ஆசியாவின் டாப் 25 மியூசியங்கள் பட்டியல்: இந்தியாவிலிருந்து 5 மியூசியங்கள் தேர்வு
ஆசியாவின் டாப் 25 மியூசியங்கள் பட்டியலில் இந்தியாவிலிருந்து 5 மியூசியங்கள் இடம்பெற்றுள்ளன.
ஆசிய நாடுகளின் முதன்மையான 25 மியூசியங்கள் பட்டியலில் இந்திய நாட்டைச்சேர்ந்த 5 மியூசியங்கள் இடம்பிடித்துள்ளன. இந்த பட்டியலில் ஜம்மு காஷ்மீரின் ஹால் ஆப் பேம் மியூசியம் முதல் இடத்திலும், பாகூர் கி ஹவேலி (உதய்பூர்) மியூசியம் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
3- வது இடத்தில் கொல்கத்தாவின் விக்டோரியா மெமொரியா ஹால், 4-வது இடத்தை ஐதராபாத்தின் சலர் ஜங் மியூசியம், 5-வது இடத்தில் ஜெய்சல்மர் வார் மியூசியம் இடம்பெற்றுள்ளன. மியூசியங்களின் தரம், அளவு மற்றும் உலக மக்களிடமிருந்து கிடைத்த விமர்சனங்களின் அடிப்படையில் இந்த மியூசியங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அதே நேரம் உலகின் டாப்-25 மியூசியங்கள் பட்டியலில் இந்தியாவின் எந்தவொரு மியூசியமும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆசியாவின் டாப்-25 பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்த மியூசியங்கள் இந்தியாவின் டாப்-5 மியூசியங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தரவரிசைப்படுத்தப்பட்டுள்ள் மியூசிங்களுக்கு டிரிப்அட்வைசர் நிறுவனம், டிராவலர்ஸ் சாய்ஸ் விருதுகளை வழங்கி கவுரவிக்க உள்ளது.
No comments:
Post a Comment