இந்தியாவில், 2020ம் ஆண்டிற்குள், இணையதளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 50 கோடியாக அதிகரிக்கும் என, 'கூகுள்' நிறுவனம் மதிப்பிட்டு உள்ளது.
ம.பி., மாநிலம், போபாலில் உள்ள ராஜீவ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கூகுள் நிறுவனத்தின், ஆசிய - பசிபிக் மொழிகளுக்கான தலைவர், ரிச்சா சிங்
பேசியதாவது:
குறைந்த விலையிலான, ஆண்ட்ராய்டு போன்கள் வருகைக்கு பின், இந்தியாவில்
இணையதளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஹிந்தி, தமிழ், கன்னடம் போன்ற மொழிகள் மட்டுமே தெரிந்தவர்கள், அதிக அளவில்
இணைய தளத்தை பயன்படுத்துகின்றனர்.
இந்தியாவில் தற்போது, 35 கோடி பேர் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர்; இந்த
எண்ணிக்கை, 2020ம் ஆண்டில், 50 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.இணைய
தளத்தை பயன்படுத்தும் புதியவர்களில், கணிசமானவர்கள், ஆங்கிலம் அல்லாத பிற மொழிகள் மட்டுமே தெரிந்தவர்களாக இருப்பர்; எனவே, இணையதளத்தில் பிற மொழிகளில் தகவல்களை அதிகளவில் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்காக, கூகுள் நிறுவனம் தனி கவனம் கொடுத்து செயல்படுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment