வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஒரே நாளில் 6 லட்சம் பேர் விண்ணப்பம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, September 13, 2016

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஒரே நாளில் 6 லட்சம் பேர் விண்ணப்பம்

சென்னை: தமிழகத்தில், 31 மாவட்டங்களில், நேற்று முன்தினம் நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில், புதிதாக பெயர் சேர்க்க, ஆறு லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

தமிழகம் முழுவதும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, செப்., 1ம் தேதி துவங்கியது. தாலுகா அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ராமநாதபுரம் தவிர, 31 மாவட்டங்களில் உள்ள அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், நேற்று முன்தினம், வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது; இம்முகாம்களில், 2017 ஜன., 1ம் தேதி, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வாக்காளர்களாக விண்ணப்பக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில், மே மாதம் சட்டசபை தேர்தல் நடந்தது. அதற்கு முன், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, பல சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. எனவே, இம்முறை பெயர் சேர்க்க, குறைந்த விண்ணப்பங்களே வரும் என, அதிகாரிகள் எதிர்பார்த்தனர்; ஆனால், நேற்று முன்தினம் நடந்த சிறப்பு முகாம்களில், ஏராளமானோர் விண்ணப்பம் கொடுக்க குவிந்தனர்.
சிறப்பு முகாம்களில் மட்டும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, 5.77 லட்சம்; பெயர் நீக்க,
திருத்தம் செய்ய, முகவரி மாற்ற என, மொத்தம், 7.30 லட்சம் விண்ணப்பங்கள் வரப்பெற்றன.
சிறப்பு முகாமிற்கு முந்தைய நாள் வரை, அரசு அலுவலகங்களில், 21 ஆயிரத்து, 920 விண்ணப்பங்கள்; 'ஆன்லைன்' மூலம் பெயர் சேர்க்க, 50 ஆயிரம் விண்ணப்பங்கள் என, ஒட்டுமொத்தமாக, எட்டு லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இரண்டாவது வாக்காளர் சிறப்பு முகாம், வரும், 25ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

காஞ்சிபுரம் முதலிடம்! : வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கோரி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், அதிகபட்சமாக, 48 ஆயிரத்து, 616 விண்ணப்பங்கள் வந்துள்ளன; அடுத்தபடியாக கோவையில், 39 ஆயிரத்து, 518 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

மிகக் குறைந்தபட்சமாக, நீலகிரி மாவட்டத்தில், 3,932 பேர் மட்டும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்து உள்ளனர்.

No comments:

Post a Comment