உடற்கல்வி ஆசிரியர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, September 10, 2016

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு வாழ்வியல் திறன் குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது. அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் சார்பில், ஆசிரியர்களுக்கு கணினி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பாடம் கற்பித்தல், பாலியல் பாகுபாடு களைதல் குறித்த பயிற்சி அளிக்கப்படஉள்ளது.
இதற்கான பாடப் புத்தகங்கள், பயிற்சி கையேடுகள், பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, வாழ்வியல் திறன் பயிற்சி எனப்படும் யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக அந்தந்த மாவட்ட தலைநகரில்செப்.,19 முதல் 23 வரை ஐந்து நாட்கள் யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் பயிற்சி பெறும் ஆசிரியர்கள்தங்கள் பள்ளிகளில் மாணவர்களுக்கு யோகா பயிற்சியளிக்க வேண்டும்.இதற்கான ஏற்பாடுகளை அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் சார்பில் செய்துவருகின்றனர்.

No comments:

Post a Comment