TNPSC GROUP 4 - விண்ணப்பிப்பதில் சிக்கல் : முடங்கியது வெப்சைட் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, September 8, 2016

TNPSC GROUP 4 - விண்ணப்பிப்பதில் சிக்கல் : முடங்கியது வெப்சைட்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க 8-ந் தேதி கடைசி நாள் என்பதால் அதிகமான இளைஞர்கள் விண்ணப்பம் செய்வதால் இணையதளம் சரியாக வேலை செய்யாததால் இளைஞர்கள் அவதிப்படுகின்றனர்.
தமிழ்நாடு அரசு பல்வேறு அரசு அலுவலகங்களில் பல்வேறு பதவிகளில் பணியாற்ற டி.என்.பி.எஸ்.சி தேர்வு வாரியமம் மூலம் தேர்வு நடத்தி ஆள் எடுத்து வருகிறது. தற்சமயம் அதே போல குரூப் 4 தேர்வை இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த ஒரு மாதம் முன்பு இந்த அறிவிப்பு வெளியானது.
இணையதளத்தில் தடை:
கடந்த ஒரு மாதமாக விண்ணப்பிக்க காலம் இருந்த போதிலும் கடைசி நாட்களில் விண்ணப்பிக்க காத்திருந்த இளைஞர்கள் கடந்த 2 நாட்களாக இணையதளத்தில் விண்ணப்பம் செய்ய செல்கின்றனர். ஆனால் ஒரே நேரத்தில் லட்சக்கணக்காண இளைஞர்கள் விண்ணப்பம் செய்ய முயற்சி செய்வதால் சம்மந்தப்பட்ட இணைய தளத்தில் தடை ஏற்பட்டு சரிவர இயங்கவில்லை. இதனால் கடந்த 2 நாட்களாக இளைஞர்கள் விண்ணப்பிக்க முடியாததால் தவிக்கின்றனர். அதனால் மாற்று இணையதள முகவரி கொடுத்தாலோ அல்லது விண்ணப்பம் செய்ய கால நீடிப்பு செய்தாலோ விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கும் இளைஞர்கள் விண்ணப்பம் செய்ய வசதியாக இருக்கும் என்று கூறுகின்றனர்.

No comments:

Post a Comment