புதிய ஊதிய விதிகள் - 2021 வருகிற அக்டோபர் 1-ம் தேதி முதல் புதிய ஊதிய விதிகள் அமலுக்கு வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, September 3, 2021

புதிய ஊதிய விதிகள் - 2021 வருகிற அக்டோபர் 1-ம் தேதி முதல் புதிய ஊதிய விதிகள் அமலுக்கு வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

புதிய ஊதிய விதிகள் - 2021 வருகிற அக்டோபர் 1-ம் தேதி முதல் புதிய ஊதிய விதிகள் அமலுக்கு வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 

    தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் புதிய ஊதிய விதியின் படி, ஊழியர்களின் வேலை நேரம் ஒரு நாளைக்கு 12 மணி நேரமாகவும், வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாகவும் இருக்கலாம். மீதமிருக்கும் 3 நாட்கள், சம்பளத்துடன் கூடிய கட்டாய விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட வேண்டும். 

     இது ஒவ்வொரு தொழிலாளியின் ஒப்புதலுடன் நடைபெற வேண்டும். ஏனெனில் அனைவராலும் ஒரு நாளில் 12 மணி நேரம் வேலை செய்ய இயலாது என்றும், புதிய ஊதிய விதி வளியுறுத்துகிறது. உடல் நலம் பாதிப்பு, பிரசவம் போன்ற காரணங்களுக்காக அதிகபட்சம் 240 நாள்கள் வரை விடுமுறை எடுக்கலாம் என்று இதற்குமுன் இருந்தது. அது தற்போது 300 நாட்களாக உயர்த்தப்படவுள்ளது 

        புதிய விதிகளின்படி ஊழியர்களுக்குக் கொடுக்கும் அடிப்படை ஊதியம் குறைந்தபட்சம் 50% இருக்க வேண்டும். வழங்கப்படும் வீட்டு வாடகை படி, அகவிலைப் படி, பயண படி உள்ளிட்டவை 50%-க்கு மேல் செல்லக் கூடாது. டிப்படை ஊதியம் அதிகமானால் பி.எஃப் பிடித்தம் அதிகரிக்கும். 

            இதனால் மாத சம்பளம் குறையும். ஆனால் ஓய்வுபெறும் போது கிடைக்கும் தொகை உயரும். தற்போது பெரும்பாலான தொழில் நிறுவனங்களில், ஒரு நாளைக்கு 8 மணி நேரம் என்கிற அடிப்படையில், ஒரு வாரத்துக்கு 6 நாள் வேலை நாளாகவும், ஒரு நாள் கட்டாய விடுமுறை நாளாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment