தமிழ் வழியில் பயின்றோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அளித்தல் - வழிகாட்டு நெறிமுறைகள் கொண்ட அரசாணை வெளியீடு! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, September 2, 2021

தமிழ் வழியில் பயின்றோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அளித்தல் - வழிகாட்டு நெறிமுறைகள் கொண்ட அரசாணை வெளியீடு!

பொதுப் பணிகள் 2010 - ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் கீழ்வரும் பணிகளில் முன்னுரிமையின் அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்டம் மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பினை செயல்படுத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு பணிகளில் முன்னுரிமை வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு. 

 தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் 20% இட ஒதுக்கீடு. பள்ளிப்படிப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, முதுகலை பட்டப் படிப்பு என்று அனைத்தையும் முழுவதுமாக தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும். வேறு மொழிகளில் படித்து, தேர்வை மட்டும் தமிழில் எழுதியவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது- தமிழ்நாடு அரசு. தனித் தேர்வர்களுக்கும் இட ஒதுக்கீடு பொருந்தாது. 

 தமிழ் வழியில் படித்ததற்கான கல்வி சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை சரியாக ஆராய்ந்த பின்னரே, இட ஒதுக்கீட்டின் கீழ் பணி நியமனம்- தமிழ்நாடு அரசு.

No comments:

Post a Comment