பள்ளிகள் திறக்கப்பட்டவுடன்.. குழந்தைகளிடம் அதிகரிக்கும் கொரோனா? அமைச்சர் மா.சு அளிக்கும் விளக்கம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, September 5, 2021

பள்ளிகள் திறக்கப்பட்டவுடன்.. குழந்தைகளிடம் அதிகரிக்கும் கொரோனா? அமைச்சர் மா.சு அளிக்கும் விளக்கம்

பள்ளிகள் திறக்கப்பட்டவுடன்.. குழந்தைகளிடம் அதிகரிக்கும் கொரோனா? அமைச்சர் மா.சு அளிக்கும் விளக்கம் பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா ஏற்பட்டது என்பது தவறான கருத்து எனக் கூறிய மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அவர்களுக்கு முன்பே அறிகுறிகள் இருந்ததால் தான் இப்போது கொரோனா பாதிப்பு ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளார். 

     சென்னை கிண்டி மடுவாங்கரையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு மற்றும் குடிநீர் பாதுகாப்பு வாரம் குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. 

     தொடர்ந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் ஏற்படும் கொரோனா பாதிப்பு பற்றிப் பேசிய அவர், "செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறந்தவுடன் தான் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு கொரோனா ஏற்பட்டது என்பது தவறான கருத்து. அவர்களுக்கு முன்பே அறிகுறிகள் இருந்ததால் தான் தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களுக்குப் பரவும் முன் தொற்று உறுதி செய்யப்பட்டது மகிழ்ச்சியான விஷயம் தான். அவர்களுக்குச் சிகிச்சை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. 

        இது மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்க உள்ளாட்சி அமைப்புகளில் நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், கோவை கேரளா எல்லைப் பகுதியில் இருப்பதால் தொற்று அதிகரித்துள்ளது. கேரள எல்லையை ஒட்டி இருக்கக் கூடிய 9 மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து 9 மாவட்டங்களில் 100 % தடுப்பூசி என்ற இலக்கை எட்ட ஏதுவாக கூடுதலாகத் தடுப்பூசி வழங்க வேண்டும் என்று கேட்டு இருக்கிறோம். 

        9 மாவட்டங்களில் கூடுதலாகத் தடுப்பூசி போடுவதற்காக அனைத்து நடவடிக்கையும் சுகாதாரத் துறை எடுத்து வருகிறது. அதேபோல, கேரளாவிலும் மிகச் சிறப்பான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தசை சிதைவு போன்ற நோயினால் தமிழகத்தில் 7 குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள், அவர்களுக்கு அமெரிக்காவில் இருந்து மருத்துவர்களை வரவழைத்து சிகிச்சை அளிப்பதற்கு 16 கோடி செலவாகும் என்று கூறுகிறார்கள். ஆனால் அதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. அவர்களுக்கு என்ன சிகிச்சை அளிக்க வேண்டும் 

        அதற்கான உரியச் சிகிச்சை அளிக்கப்படும். இந்தியாவில் எந்த இடத்திலும் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடும் பணி தொடங்கவில்லை. கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் 17 வயது 18 வயதிற்குள் உள்ளவர்களுக்குத் தடுப்பூசி போடுவது குறித்து மத்திய அரசிடம் பேசி இருக்கிறோம். அது குறித்த ஆய்வு நடந்து வருவதாகவும் விரைவில் அது குறித்து முடிவெடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது" என்றார். 

             இந்தியாவில் எந்த இடத்திலும் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடும் பணி தொடங்கவில்லை. கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் 17 வயது 18 வயதிற்குள் உள்ளவர்களுக்குத் தடுப்பூசி போடுவது குறித்து மத்திய அரசிடம் பேசி இருக்கிறோம். அது குறித்த ஆய்வு நடந்து வருவதாகவும் விரைவில் அது குறித்து முடிவெடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது" என்றார்.

No comments:

Post a Comment