SMC தீர்மானம் மற்றும் செலவின விவரங்கள் EMIS இணைய முகப்பில் கட்டாயமாக பதிவேற்றம் செய்ய வேண்டும் - SPD Proceedings. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, September 2, 2021

SMC தீர்மானம் மற்றும் செலவின விவரங்கள் EMIS இணைய முகப்பில் கட்டாயமாக பதிவேற்றம் செய்ய வேண்டும் - SPD Proceedings.

SMC தீர்மானம் மற்றும் செலவின விவரங்கள் EMIS இணைய முகப்பில் கட்டாயமாக பதிவேற்றம் செய்ய வேண்டும் - SPD Proceedings.chool Grant - Additional Guidelines Issued. கவனம் : கள ஆய்வின் போது பள்ளிகளில் கடந்த நிதியாண்டுகளில் வாங்கப்பட்ட பொருள்கள் / உபகரணங்கள் உபயோகப்படுத்தும் நிலையில் உள்ளது என அறியப்படுகிறது. அவ்வாறு இருப்பின் , நடப்பு நிதியாண்டில் ( 2021-2022 ) அனுமதிக்கப்பட்ட தொகையினை பயன்படுத்தி அதனை மீண்டும் வாங்க வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்படுகிறது. நல்ல நிலையில் உள்ள பொருள்களை பயன்படுத்தி கொள்ளலாம்.
பள்ளிகளுக்கு தேவைப்படும் அத்தியாவசியமான பொருள்களுக்கு ஏற்றவாறு , வழிகாட்டி நெறிமுறைகளை தவறாது பின்பற்றி , பள்ளி மேலாண்மை வளர்ச்சி குழுவின் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அதனடிப்படையில் பொருள்கள் வாங்கி செலவினம் மேற்கொள்ளலாம். நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மற்றும் செலவின விவரங்கள் EMIS இணைய முகப்பில் கட்டாயமாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நிதி மேலாண்மை மற்றும் கொள்முதல் கையேடு , 2018 ன்படி மட்டுமே செலவினம் மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு தவறும் பட்சத்தில் , சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும். இவை அனைத்தையும் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இக்கடிதத்தினை அனைத்து உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அவர்களுக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.




No comments:

Post a Comment