ADW - பள்ளிகளில் ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் காலிப்பணியிட விவரம் அனுப்ப ஆணையர் உத்தரவு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, November 15, 2021

ADW - பள்ளிகளில் ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் காலிப்பணியிட விவரம் அனுப்ப ஆணையர் உத்தரவு.

ஆதிதிராவிடர் நலத்துறையின்கீழ் இயங்கும் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு வழங்க 01.03.2021 அன்றைய நிலையில் இடைநிலை ஆசிரியர் / தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் இடைநிலை காப்பாளர்கள் நிலையில் தற்காலிக ஒருங்கிணைந்த பணிமூப்பு பட்டியல் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் / நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி காப்பாளர்கள் காலிப்பணியிடம் விவரத்தினை அனுப்புமாறு அனைத்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


        ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் காலிப்பணியிட விவரம் 1.01.03.2021 அன்றைய நிலையில் ஒருங்கிணைந்த பணிமூப்பு பட்டியலினை தயார் செய்து அனைத்து ஆசிரியர்கள் அறியும் வண்ணம் தகவல் பலகையில் விளம்பரம் செய்ய வேண்டும். 01.03.2021 அன்றைய நிலையில் ஒருங்கிணைந்த பணிமூப்பு பட்டியலினை அனைத்து பள்ளிகளுக்கு சுற்றுக்கு அனுப்பட்டு சம்மந்தப்பட்ட ஆசிரியருக்கு சார்வு செய்து கையொப்பம்பெற்று அனுப்ப வேண்டும். 

     மேற்கண்ட தற்காலிக ஒருங்கிணைந்த பணிமூப்பு பட்டியலில் ஆட்சேபனைகள் வரும் பட்சத்தில் உரிய ஆவணங்களின்படி திருத்தங்கள் மேற்கொண்டு இறுதி ஒருங்கிணைந்த பணிமூப்பு பட்டியல் தயார் செய்து 22.11.2021 - க்குள் இறுதி செய்யப்பட்டு இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும். மேற்கண்ட ஒருங்கிணைந்த இறுதி பணிமூப்பு பட்டியலில் ஏற்படும் தவறுதலுக்கு தாங்களே முழுபொறுப்பேற்க நேரிடும் எனவும் இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது. 

     பட்டதாரி ஆசிரியர் நிலையில் காலிப்பணியிடம் இல்லை என்றாலும் 01.03.2021 அன்றைய நிலையில் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் / காப்பாளர்கள் நிலையில் ஒருங்கிணைந்த இறுதி பணிமூப்பு பட்டியல் தயார் செய்து அனுப்பப்பட வேண்டும். 

     31.10.2021 அன்றைய நிலையில் பட்டதாரி ஆசிரியர் காலிபணியிட விவரங்கள் / நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் / பட்டதாரி காப்பாளர்கள் காலிப்பணியிட விவரங்கள் இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து உடன் அனுப்பி வைக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment