NHIS - புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயன் பெற தகுதியுள்ள குடும்ப உறுப்பினர்கள் யார்?
தகுதியான குடும்ப உறுப்பினர்கள்
1. கணவன் (அல்லது) மனைவி.
2. குழந்தைகள் - 25 வயது பூர்த்தி அடையும் வரை அல்லது திருமணம் ஆகும் வரை. (இதில் எது முன்னரோ)
3. திருமணம் ஆகாத அரசு ஊழியர்களின் பெற்றோர்கள். (அரசு ஊழியருக்கு திருமணம் ஆகும் வரை)
4. விவாகரத்து பெற்ற அரசு ஊழியருக்கு குழந்தைகள் இல்லாத பட்சத்தில், அவரது பெற்றோர்கள். (விவாகரத்து பெற்ற அரசு ஊழியர் மறுமணம் செய்துகொள்ளும் வரை)
5. அரசு ஊழியரை சார்ந்திருக்கும் குறைந்தபட்சம் 40% சதவீத அளவில் உடல் ஊனமுற்ற மற்றும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் வயது வரம்பின்றி.
No comments:
Post a Comment