பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைக் குறைத்தது மத்திய அரசு
கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட எரிபொருட்களின் விலை தொடர் ஏற்றம் கண்டதால் மக்கள் கடுமையான இன்னலுக்கு உள்ளான நிலையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது.
அதன்படி பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.5ம் டீசல் மீதான கலால் வரி ரூ.10ம் குறைக்கப்பட்டுள்ளது. இது நாளை (நவம்பர் 4 ஆம் தேதி) முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ராபி பருவ சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வரும் நிலையில் டீசல் மீதான கலால் வரி பெட்ரோல் மீதான கலால் வரியைக் காட்டிலும் இருமடங்கு குறைக்கப்பட்டுள்ளது மிகுந்த வரவேற்பைப் பெறும் என்று மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான் வாட் வரியைக் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment