உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் (சென்னை மாநகராட்சி) பதவி உயர்வுக்கான தற்காலிக தேர்ந்தோர் பட்டியல் வெளியீடு! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, November 20, 2021

உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் (சென்னை மாநகராட்சி) பதவி உயர்வுக்கான தற்காலிக தேர்ந்தோர் பட்டியல் வெளியீடு!

உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் (சென்னை மாநகராட்சி) பதவி உயர்வுக்கான தற்காலிக தேர்ந்தோர் பட்டியல் வெளியீடு! 

                                 உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் (சென்னை மாநகராட்சி) பதவி உயர்வுக்கான தற்காலிக தேர்ந்தோர் பட்டியல் : பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் 01.01.2021 - ஐ மைய நாளாக கொண்டு 2021-2022 ஆம் கல்வியாண்டில் ஏற்பட்டுள்ள / ஏற்படவுள்ள சென்னை உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கான காலிப்பணியிடத்தினை நிரப்பும் பொருட்டு , தகுதி வாய்ந்த மூத்த பட்டதாரி / தமிழாசிரியர்கள் ( B.T.Asst / Tamil Pandit ) பணிமூப்பு அடிப்படையில் தற்காலிக தெரிவுப்பட்டியல் ( Temporary Panel ) தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்காக கீழ்காணும் தேர்ச்சிகளை பெற்ற மூத்த தகுதி வாய்ந்த பட்டதாரி / தமிழாசிரியர்கள் தகுதியுடையவராகிறார்கள். மேலும் , பட்டதாரி ஆசிரியர் பதவியில் குறைந்தது 5 ஆண்டுகள் பணியாற்றி பதவி உயர்வு மூலம் முதுகலைப்பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் , பட்டதாரி ஆசிரியர் பணிமூப்பின்அடிப்படையில் , உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி வகை மாற்றம் மூலம் பணிபுரிய தகுதியுடையவராகிறார்கள். 


No comments:

Post a Comment