இன்று (26.11.2021) சின்னவரிகம் ஊ.ஒ.ந.நி.பள்ளியில் இல்லம் தேடிக் கல்வி விழிப்புணர்வு நிகழ்வு நடைப்பெற்றது. விழாவிற்கு ஊ.ம.தலைவர் திருமதி.ஷோபனா நவீன்குமார் தலைமை தாங்கினார். வட்டாரக் கல்வி அலுவலர் திரு.கதிரவன், மேற்பார்வையாளர் (பொ) திருமதி. ஜெயசுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய குழு உறுப்பினர் திருமதி.மஞ்சுளா பரசுராமன் வரவேற்புரை ஆற்றினார்.
ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.A.C.வில்வநாதன் அவர்கள் விழிப்புணர்வு அழைப்பிதழை வெளியிட்டு கலைக்குழுவை துவக்கி வைத்தார்கள். மாதனூர் ஒன்றிய பெருந்தலைவர் திரு.சுரேஷ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் திரு.சுப்பிரமணி அவர்கள் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கினார். கலைக்குழுவின் சார்பாக ஆடல்,பாடல்,நாடகம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கிராம அறிவியல் விழிப்புணர்வு இயக்கம் (VISAI) தலைவர் திரு.அறிவொளி ஆனந்தன் பெற்றோர்கள் மற்றும் பொது மக்களுக்கு அழைப்பிதழ்களை கொடுத்தார்.முடிவில் பள்ளித் தலைமையாசிரியர் திருமதி. சரோஜினி அவர்கள் கலந்துக் கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment