கட்செவி அஞ்சலில் (வாட்ஸ் அப்), முகநூல் (ஃபேஸ் புக்), குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமாக பொதுமக்கள் புகார் தெரிவிக்க முன்வர வேண்டும் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:
ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் எளிதில் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும், புகார்கள் தெரிவிக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேர
அவசர கால செயல் மையம் செயல்பட்டு வருகிறது.
பேரிடர் அவசர கால தகவல்கள் மற்றும் புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க வசதியாக கட்டணமில்லாத தொலைபேசி எண் 1077 செயல்பட்டு வருகிறது. 0424-1077, 0424-2260211 என்ற தொலைபேசி எண்களிலும் பொதுமக்கள் தங்களது ஆலோசனை, புகார்களை தெரிவிக்கலாம்.
கடந்த மே 1-ஆம் தேதி முதல் பொதுமக்கள் இணையதள சமூக வலைதளங்களான முகநூல் (ஃபேஸ் புக்), கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்), டெலிகிராம், குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) போன்றவை மூலமாக ஆலோசனைகள், புகார்களைத் தெரிவிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் முகநூலில் District Collector Erode என்னும் பக்கத்துக்குச் சென்று பதிவு செய்யலாம். கட்செவி அஞ்சல், டெலிகிராம், குறுஞ்செய்திகளை 78069-17007 என்ற செல்லிடப்பேசி எண் மூலமாகப் பதிவு செய்து அனுப்பலாம்.
இதுவரை 385 புகார்கள் வரப்பெற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களது ஆலோசனை, புகார்களை சமூக ஊடகங்கள் மூலமாகத் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment