5 கி.மீ., தூரம் பள்ளிக்கு நடந்து சென்றேன்; ஜனாதிபதி உருக்கம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, September 4, 2015

5 கி.மீ., தூரம் பள்ளிக்கு நடந்து சென்றேன்; ஜனாதிபதி உருக்கம்

டில்லியில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் வித்யாலயா பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இந்திய அரசியல் வரலாறு பாடம் நடத்தினார். அப்போது தான், கிராமப்புறத்தில் இருந்து பள்ளிக்கு சென்றேன் என்றும், நாள்தோறும் 5 கி,மீ., தூரம் நடந்து சென்றேன் என தமது பழைய நினைவுகளை மாணவர்களுடன் ஜனாதிபதி பகிர்ந்து கொண்டார்.

மாணவர்கள் மத்தியில் ஜனாதிபதி மேலும் பேசியதாவது;

நான் படிக்கும் போது மிக குறும்பு, சேட்டை செய்பவனாக இருந்தேன். எனது தாயார் எனக்கு அறிவுரை வழங்கி, கடினமாக உழைக்க வழி காட்டினார். நான் சாதாரண கிராமத்தில் இருந்து செல்லும் ஒரு சராசரியான மாணவனாக தான் இருந்தேன். மண்ணெண்ணெய் விளக்குகளில் தான் நாங்கள் படித்தோம். நாங்கள் நவீனம் பார்க்கவில்லை.

கிராமப்புறத்தில் இருந்து பள்ளிக்கு சென்றேன். நாள்தோறும் 5 கி,மீ., தூரம் நடந்து சென்றேன் . வெயில் தாங்க முடியாமல் புத்தகத்தை தலையில் வைத்து தப்பினேன். நான் பெரும் புலமை பெறவில்லை. சிறந்த மாணவனாக திகழ்ந்ததில்லை , நான் சாராசரி தலைராக உருவெடுத்தேன்.

இந்திய திரு நாட்டில் நமது அரசியலமைப்பு மிக சிறந்ததாக விளங்குகிறது. மக்களுக்கான சட்டத்தை நிறைவேற்ற மக்களுக்கு அதிகாரம் உள்ளது. நமது பொருளாதாரம் குறித்து பலரும் என்னிடம் குறைபடுகின்றனர். நமது பொருளாதாரம் வேகமாக வளரவில்லையே என்று. ஆனால் நமது பொருளாதார கொள்கைகள் குறைபாடுகள் குறித்து பார்க்க தவறுகின்றனர். இது போன்ற குறைகள் களையப்பட வேண்டும்.

நமது நாட்டின் வளர்ச்சி சதவிதம் குறைவாக இருந்தாலும், உள்நாட்டு சேமிப்பு சராசரி விகிதம் உயர்ந்து வருகிறது. நாட்டின் சுதந்திரத்திற்கு பின்னர் நாம் சாலை வசதிகள், மின்சாரம் பெற்றோம். பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் அளவுக்கு சாலைகள் கிடைத்தது என்றார்.

No comments:

Post a Comment