கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, September 3, 2015

கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு

பீடி, சுரங்கம் மற்றும் சினிமா தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்வி உதவித்தொகை பெற, விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

இதுகுறித்து, மத்திய அரசின் தொழிலாளர் நல ஆணையாளர் ஜோப்பிரின்ஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகாரம் பெற்ற பள்ளி, கல்லுாரிகளில் பயிலும் பீடி, சுரங்கம் மற்றும் சினிமா தொழிலாளர்களின் பிள்ளைகள், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

உதவித்தொகை சம்பந்தமான தகவல்களையும், விண்ணப்பத்தையும், http://tirunelveli.nic.in./pdf/cg/.scholar.pdf என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, அந்தந்த கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment