கூடலுாரை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நடப்பு கல்வியாண்டுக்கான, தேசிய நல்லாசிரியர் விருது வரும், 5ம் தேதி டில்லியில் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு நீலகிரி மாவட்டம், கூடலுார் பகுதியை சேர்ந்த, ஓய்வு பெற்ற ஊராட்சி ஒன்றிய பள்ளி தலைமை ஆசிரியர் ராணி சிவகாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், 35 ஆண்டுகளாக, கூடலுாரில் உள்ள பல்வேறு ஊராட்சி பள்ளிகளில், ஆசிரியை ஆகவும், 15 ஆண்டுகள் தலைமை ஆசிரியை ஆகவும் பணிபுரிந்துள்ளார்.
கூடலுார் ஓவேலி சூண்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தலைமை ஆசிரியை ஆக பணியாற்றி, மே மாதம் ஓய்வு பெற்றார். ஆசிரியர் ராணிசிவகாமி கூறுகையில், ஆசிரியர் பணியை பெருமையாக கருதி, ஆத்ம திருப்தியுடன் செய்தேன். ஏற்கனவே, மாநில நல்லாசிரியர் விருது பெற்றுள்ளேன். தேசிய நல்லாசிரியர் விருதுக்கும், தேர்வு செய்திருப்பது எனக்கும், நான் பணிபுரிந்த கூடலுார் பகுதிக்கும் கிடைத்த பெரிய கவுரவமாக கருதுகிறேன். ஆசிரியர்கள், மாணவர்களின் நலனுக்காக சேவை செய்தால், இத்தகைய விருதுகள் தேடி வரும், என்றார்.
No comments:
Post a Comment