தமிழகம் முழுவதும் இன்று இரண்டாம் பருவத் தேர்வு & அரையாண்டு தேர்வு தொடங்கியது - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, January 11, 2016

தமிழகம் முழுவதும் இன்று இரண்டாம் பருவத் தேர்வு & அரையாண்டு தேர்வு தொடங்கியது

வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு வரலாறு காணாத வகையில் பெய்து கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு கடும் சேதத்தை விளைவித்தன.இதனால் சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் ஒரு மாதத்திற்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி நடைபெற வேண்டிய அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.குறிப்பாக 10–ம் வகுப்பு, 12–ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கக் கூடாது என்பதற்காக முதல் – அமைச்சர் ஜெயலலிதா தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வு ஜனவரி 11–ந்தேதி தொடங்கப்படும் என்று அறிவித்தார்.அதன்படி பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு இன்று தொடங்கியது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் தேர்வுகள் இன்று தொடங்கி 27–ந்தேதி வரை நடைபெறுகிறது.இன்று 10–ம் வகுப்பு, 11–ம் வகுப்பு மற்றும் 12–ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெற்றது. நாளை பிளஸ் – 1, பிளஸ்– 2 மாணவர்களுக்கு தமிழ் இரண்டாம் தாள் தேர்வு நடக்கிறது.13–ந்தேதி 10–ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் – 2–ம் தாள் தேர்வும், பிளஸ் – 1, பிளஸ் – 2 மாணவர்களுக்கு ஆங்கிலம் முதல் தாள் தேர்வும் நடக்கிறது. 14–ந்தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு பிளஸ் – 1, பிளஸ் – 2 மாணவ – மாணவிகளுக்கு நடக்கிறது.அதனைத் தொடர்ந்து 15–ந்தேதி முதல் 17–ந்தேதி வரை பொங்கல் விடுமுறை விடப்படுகிறது. மீண்டும் 18–ந்தேதி அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகள் தொடங்கி 27–ந்தேதி முடிவடைகிறது.மழை வெள்ளத்தால் ஒரு மாதம் தாமதமாக அரையாண்டு தேர்வு தொடங்கி முடிகிறது.இதற்கிடையில் ஒரு சில பள்ளிகளில் அரையாண்டு தேர்வு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பே முடித்து விட்டனர். பள்ளி கல்வித்துறையினர் உத்தரவை மீறி மாணவர்களின் நலனை கருதாமல் அவசர அவசரமாக அரையாண்டு தேர்வினை நடத்தி முடித்தனர்.இதனால் மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் பெரும் கஷ்டத்திற்கு ஆளானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment