ஆன்லைன் வகுப்புகள் அதிகரிக்கும் நிலையில், கணினி ஆசிரியர்களை நியமிக்காமலும், கணினி அறிவியல் பட்டத்திற்கு அங்கீகாரம் வழங்காமலும் பள்ளிக் கல்வியில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில், 1992 முதல் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வில்,
கணினி அறிவியல் படிப்பு அறிமுகமானது. கணினி பற்றிய அடிப் படை தகவல்களை மட்டும் அறிந்தோர், பட்டப் படிப்பு படிக்காவிட்டாலும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். பின், கணினி படிப்பு முடிக்காதோர், 2008ல் நீக்கப்பட்டனர்.
பல்கலைகளில், 1992 முதல், கணினி அறிவியல் பாடத்தில், பி.எஸ்சி.,
பிறகு பி.எட்., படிப்புகள் துவங்கப்பட்டன. இது வரை, *40 ஆயிரம் பேர், கணினி அறிவியலில் பி.எஸ்சி., - பி.எட்., பட்டமும்; 20 ஆயிரம் பேர், எம்.எஸ்சி., - எம்.எட்., பட்டமும் முடித்துள்ளனர்.
இவர்களுக்கு தமிழகபள்ளிகளில் பல ஆயிரம் காலிப் பணியிடங்கள் இருந்தும் பணி வாய்ப்புகள் வழங்கவில்லை.
வேலை வாய்ப்புக்கு ஆட்களை தேர்வு செய்யும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், கணினி அறிவியல் படிப்பை இன்னும் அங்கீகரிக்க வில்லை.* பள்ளிக்கல்வி துறையினர், மெத்தன மாக உள்ளனர்.
ஆன்லைன் படிப்புக்கும், ஐ.சி.டி., எனப்படும் கணினி வழி தொழில்நுட்பக் கல்விக்கும் முக்கியத்துவம் கொடுக்க, தமிழக அரசுக்கு, மத்திய அரசு அறிவுறுத்த உள்ளது.
*தமிழக அதிகாரிகள், மெத்தனத்தால், ஐ.சி.டி., கல்விபடிப்பில் தமிழகம் பின்னடைவை சந்திக்கும் அபாயம் உள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் கம்யூ., சயின்ஸ் பாடத்தை, கணிதம், வணிகவியல் பாடங்களுடன் இணைத்து, புதிய பாடப்பிரிவுகளும் துவக்கப்பட்டு உள்ளன; அவற்றுக்கு சரியான ஆசியர்கள் இல்லை. இந்த முரண்பாடுகள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரை கடும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன.
இதுகுறித்து, வேலையில்லாத கணினி பட்ட தாரி ஆசிரியர் சங்க மாநில துணை அமைப் பாளர் ஏ.முத்துவடிவேல் கூறுகையில், ''மற்ற மாநிலங்களில், ஆசிரியர் தகுதித் தேர்விலும், ஆசிரியர் நியமனத்தில் *கணினி அறிவியல் பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டுமே கணினி அறிவியல் பாடத்தை புறக்கணித்திருப்பது வேதனையாக உள்ளது,''என்றார்.
No comments:
Post a Comment