ஆந்திர கடலோர பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதால், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது:
வடமேற்கு வங்கக் கடலில், ஆந்திர கடலோரப் பகுதியில், அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை, ஒருசில இடங்களில் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment