தனியார் மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளில் பட்ட மேற்படிப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.2.25 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரை கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 8 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், 7 தனியார் மருத்துவக் கல்லூரிகள், 7 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. தனியார் மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் அரசுக்கு 50 சதவீத இடங்களைக் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, தனியார் கல்லூரிகள் (சிறுபான்மையினர் கல்லூரிகள் 50 சதவீத இடங்கள், சிறுபான்மையினர் அல்லாத கல்லூரிகள் 65 சதவீத இடங்கள்) மாநில அரசுக்கு இடங்களைக் கொடுத்தன. நிகர் நிலைப் பல்கலைக்கழகங்கள் நீதிமன்றத்துக்கு சென்றதால், இன்னும் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கிடைக்கவில்லை.ஒற்றைச் சாளர முறைதனியார் மருத்துவ, பல் மருத் துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க் கையை மாநில அரசே ஒற்றைச் சாளர முறையில் நடத்த வேண்டும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதன்படி நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் உள்ள மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை அண்ணா சாலையில்உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கடந்த 18-ம் தேதி தொடங்கியது. கலந்தாய்வு இன்று வரை நடக்கிறது.
2-ம் கட்ட கலந்தாய்வு
இதைத் தொடர்ந்து, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந் தாய்வு நாளை (22-ம் தேதி) தொடங்கி முதல் 23-ம் தேதி பகல் 11 மணி வரைநடக்கிறது. 23-ம் தேதி பகல் 2 மணிக்கு பிறகு தனியார் பல்மருத்துவக் கல்லூரி கள், அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் பல் மருத்துவப் பட்ட மேற்படிப்பு இடங்களுக்கான கலந் தாய்வு நடைபெறுகிறது. இதை யடுத்து தனியார் மருத்துவக் கல்லூரிகள், அண்ணாமலை பல் கலைக்கழகத்தின் அரசு ஒதுக் கீட்டு இடங்களுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு 24-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை நடக்க உள்ளது.
சிறுபான்மையினர் கல்லூரிகள்
இந்நிலையில், தனியார் மருத் துவ, பல் மருத்துவக் கல்லூரிகளில் பட்ட மேற்படிப்புகளுக்கு 2017-18ம் ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் நிர்ணயித்துள்ளனர். அதன்படி சிறுபான்மை தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பட்ட மேற்படிப்புகள் (சிகிச்சை) அரசு ஒதுக்கீட்டு இடத்துக்கு ரூ.3 லட்சம், நிர்வாக ஒதுக்கீட்டு இடத்துக்கு ரு.11.50 லட்சம், பட்ட மேற்படிப்புகள் (கற்பித்தல்) அரசு ஒதுக்கீட்டு இடத்துக்கு ரூ.2.25 லட்சம், நிர்வாக ஒதுக்கீட்டு இடத்துக்கு ரூ.3.25 லட்சம், பட்டய மேற்படிப்புகளுக்கு (டிப்ளமோ) அரசு ஒதுக்கீட்டு இடத்துக்கு ரூ.2.50 லட்சம், நிர்வாக ஒதுக்கீட்டு இடத்துக்கு ரூ.3.50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.சிறுபான்மை அல்லாத..சிறுபான்மை அல்லாத தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பட்ட மேற்படிப்புகளுக்கு (சிகிச்சை) அரசு ஒதுக்கீட்டு இடத்துக்கு ரூ.3 லட்சம், நிர்வாக ஒதுக்கீட்டு இடத்துக்கு ரூ.13 லட்சம், பட்ட மேற்படிப்புகள் (கற்பித்தல்) அரசு ஒதுக்கீட்டு இடத்துக்கு ரூ.2.50 லட்சம், நிர்வாக ஒதுக்கீட்டு இடத்துக்கு ரூ.3.50 லட்சம்,பட்டய மேற்படிப்புகளுக்கு (டிப்ளமோ) அரசு ஒதுக்கீட்டு இடத்துக்கு ரூ.2.50 லட்சம், நிர்வாக ஒதுக்கீட்டு இடத்துக்கு ரூ.3.50 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பல் மருத்துவக் கல்லூரிகள்
சிறுபான்மை தனியார் பல் மருத் துவக் கல்லூரிகளில் பட்டமேற் படிப்பு (சிகிச்சை) அரசு ஒதுக்கீட்டு இடத்துக்கு ரூ.2.50 லட்சம், நிர்வாக ஒதுக்கீட்டு இடத்துக்கு ரூ.8.50 லட்சம், பட்ட மேற்படிப்பு (கற்பித்தல்) அரசு ஒதுக் கீட்டு இடத்துக்கு ரூ.2.25 லட்சம், நிர்வாக ஒதுக்கீட்டு இடத்துக்கு ரூ.3.25 லட்சம்நிர்ணயிக்கப்பட்டுள்ளது.சிறுபான்மை அல்லாத தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பு (சிகிச்சை) அரசு ஒதுக்கீட்டு இடத்துக்கு ரூ.2.50 லட்சம், நிர்வாக ஒதுக்கீட்டு இடத்துக்கு ரூ.9.50 லட்சம், பட்டமேற்படிப்பு (கற்பித்தல்) அரசு ஒதுக்கீட்டு இடத்துக்கு ரூ.2.50 லட்சம், நிர்வாக ஒதுக்கீட்டு இடத்துக்கு ரூ.3.50 லட்சம்நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ரூ.60 லட்சம் கட்டணம்
நிகர்நிலைப் பல்கலைக்கழகங் களில் மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரைகட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்தந்த பல்கலைக்கழகங்களில் உள்ள கல்விக் கட்டண நிர்ணயக்குழு, இந்தக் கட்டணத்தை நிர்ணயித்துள்ளது.
No comments:
Post a Comment