இன்று நிறைவடைகிறது அக்னி நட்சத்திரம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, May 28, 2017

இன்று நிறைவடைகிறது அக்னி நட்சத்திரம்

இன்று நிறைவடைகிறது அக்னி நட்சத்திரம்இன்றுடன் அக்னி நட்சத்திரம் நிறைவடைகிறது. இதனால் வெயிலின் தாக்கம் குறைய துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் இந்தாண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிக அளவில் உணரப்பட்டது.
பல இடங்களில் தண்ணீர் இல்லாமல் தண்ணீர்
பஞ்சம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் துவங்கிய நிலையில் வெப்பம் மேலும் அதிகரித்தது. இதனால் ஏற்பட்ட வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது கோடை மழை பெய்தது. ஆனால் வட மாநிலங்களில் பெருநகரங்களில் வரலாறு காணத 110 டிகிரி வரையிலான வெப்பம் பதிவனாது.இதனால் மக்கள் கடும் அவதிப்பட்டனர்.
இந்நிலையில் இன்றுடன் அக்னி நட்சத்திரம் முடிவடைய உள்ளது. எனவே வரும் நாட்களில் வெப்பத்தின் அளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment