ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை மால்வேர் பாதிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, May 30, 2017

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை மால்வேர் பாதிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

உலகம் முழுக்க மால்வேர் சார்ந்த சைபர் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. சமீபத்திய ரான்சம்வேர் தாக்குதல்கள் இணைய உலகின் அபாயத்தை நமக்கு உணர வைத்தது. உலகின் பெரும் நிறுவனங்களும் மால்வேர் பாதிப்புகளில் சிக்கின.

கணினிகளை போன்றே, ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் இண்டர்நெட் அத்தியாவசிய தேவையாகி விட்டது. இண்டர்நெட் நமக்கு பல்வேறு வசதிகளை வழங்கினாலும் அவை நமக்கு வம்பிழுக்கவும் வாய்ப்பை ஏற்படுத்தி விடுகின்றன.

இவ்வாறு இண்டர்நெட் மூலம் ஏற்படும் அபாயங்களில் மால்வேர் தாக்குதல் முக்கியமானதாக உள்ளது. உங்களது ஸ்மார்ட்போன்களில் இதுபோன்ற மால்வேர் தாக்குதல்களை தவிர்க்க நீங்கள் முன்கூட்டியே செய்ய வேண்டிவற்றை தொடர்ந்து பார்ப்போம்.

பிரான்ட்டெட் செயலிகள்:

ஸ்மார்ட்போன்களுக்கான செயலிகளை எப்போதும் தரமான பிளே ஸ்டோர்களில் இருந்து மட்டுமே டவுன்லோடு செய்ய வேண்டும். பொதுவாக கூகுள், அமேசான், சாம்சங் மற்றும் சில நிறுவனங்கள் தங்களது பிளே ஸ்டோர்களில் உள்ள செயலிகளை பாதுகாப்பாக வைத்து கொள்கின்றன.

இதனால் நீங்கள் டவுன்லோடு செய்யும் செயலி பாதுகாப்பானதாகவும், சாதனத்திற்கு மால்வேர் பாதிப்பை ஏற்படுத்தாமல் தடுக்கவும் செய்யும். இதற்கென செயலிகளில் சீரான இடைவெளியில் அப்டேட்கள் வழங்கப்படுகின்றன.

போலி செயலிகள்:

ஸ்மார்ட்போன்களில் டவுன்லோடு செய்யும் செயலிகள் உண்மையானவை தானா என்பதை உறுதி செய்ய வேண்டும். போலியான செயலிகளை நம்ப முடியாத வசதிகள், குறைந்த வாடிக்கையாளர் மதிப்பீடு (ரீவியூ) உள்ளிட்டவற்றை கொண்டு அறிந்து கொள்ள முடியும்.

போலியான செயலிகளில் ஸ்மார்ட்போன் சாதனங்களை பாதிக்கும் மால்வேர்கள் அடங்கியிருக்கும். இவை எந்நேரத்திலும் நமது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

செட்டிங்ஸ்:

மால்வேர் தாக்குதல்களை எதிர்கொள்ள ஆண்ட்ராய்டு இயங்குதளம் தயாராகி வருகிறது. அந்த வகையில் ஆண்ட்ராய்டு 2.2 மற்றும் அதற்கும் அதிகமான பதிப்புகளில் இருந்தே ஆண்ட்ராய்டு சாதனங்களை பாதுகாக்கும் வசதி வழங்கப்படுகிறது.

இதனால் பிளே ஸ்டோர்களில் இருந்து டவுன்லோடு செய்யப்படும் செயலிகளில் ஏதேனும் பாதிப்பு இருக்கும் பட்சத்தில் அதனை கூகுள் ஸ்கேன் செய்து உங்களுக்கு முன்கூட்டியே தெரிவித்து விடும்.

இதே வசதியை கூகுள் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்றும் இயக்க முடியும். ஆண்ட்ராய்டு 4.2 மற்றும் அதற்கும் அதிகமான பதிப்புகளில் இந்த வசதியை இயக்க, செட்டிங்ஸ் -- செக்யூரிட்டி -- வெரிஃபை ஆப்ஸ் பகுதிக்கு சென்று பாதுகாப்பற்ற செயலிகளை கண்டறிய முடியும்.

மென்பொருள் அப்டேட்:

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படும் மென்பொருள் அப்டேட்களை சீரான இடைவெளியில் டவுன்லோடு செய்ய வேண்டும். ஸ்மார்ட்போன்களை அடிக்கடி அப்டேட் செய்யும் போது அவை அனைத்து வித மால்வேர் மற்றும் இதர பாதிப்புகளில் சிக்காமல் தவிர்க்க முடியும்.

ஸ்மார்ட்போன் மட்டுமின்றி நீங்கள் பயன்படுத்தும் பிளே ஸ்டோர்களுக்கு சென்று செயலிகளையும் அப்டேட் செய்து கொள்ள வேண்டும். உங்களது சாதனத்தை போன்றே செயலிகளும் அப்டேட் செய்யப்பட்டிருப்பது, மால்வேர் தாக்குதல்களை தவிர்க்க உதவும். 

ஆண்டிவைரஸ் மென்பொருள்:

ஸ்மார்ட்போன்களில் ஆண்டிவைரஸ் போன்ற மென்பொருள்களை டவுன்லோடு செய்வது குறித்து பல்வேறு புரளிகள் இருந்தாலும், இவை சாதனங்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பது மட்டும் உறுதியானதாகும்.

மேலும் இதுபோன்ற மென்பொருள்கள் சாதனங்கள் ஏதிர்கொள்ளும் பாதிப்புகளை, தடுத்து நிறுத்துவதோடு சாதனத்தினுள் எவ்வித வைரஸ் மற்றும் மால்வேர்களையும் அனுமதிக்காது.

ஆண்டிவைரஸ் மென்பொருள்களை தேர்வு செய்வது அவரவர் விருப்பம் தான். எனினும் பிரபலமான ஆண்டிவைரஸ் நிறுவனங்களை தேர்வு செய்வது நல்லது.

No comments:

Post a Comment