இந்தியாவின் முதல் அதி நவீன சொகுசு ரயில் ‘தேஜாஸ்’ நாளை முதல் மும்பை- கோவா இடையேயான தன் முதல் ரயில் சேவையை தொடங்குகிறது.இந்தியாவின் முதல் அதி நவீன சொகுசு ரயில் ‘தேஜாஸ்’ நாளை முதல் மும்பை- கோவா இடையேயான தன் முதல் ரயில் சேவையை தொடங்குகிறது.
இந்தியாவில் இதுவரை
இல்லாத அளவிற்கு புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய ‘தேஜாஸ் எக்ஸ்பிரஸ்’ ரயில் நாளை முதல் மும்பை- கோவா இடையே இயக்கப்படவுள்ளது. தானியங்கி கதவுகள், நெருக்கடி இல்லாத உட்புற இருக்கைகள் என அசத்தல் கட்டமைப்புடன் தேஜாஸ் வடிவமைக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது
இந்தியாவின் முதல் அதி நவீன சொகுசு ரயில் ‘தேஜாஸ்’ நாளை முதல் மும்பை- கோவா இடையேயான தன் முதல் ரயில் சேவையை தொடங்குகிறது.
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய ‘தேஜாஸ் எக்ஸ்பிரஸ்’ ரயில் நாளை முதல் மும்பை- கோவா இடையே இயக்கப்படவுள்ளது. தானியங்கி கதவுகள், நெருக்கடி இல்லாத உட்புற இருக்கைகள் என அசத்தல் கட்டமைப்புடன் தேஜாஸ் வடிவமைக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது.
மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பாபு நாளை தேஜாஸ் எக்ஸ்பிரஸ் பயணத்தை துவக்கி வைக்கவுள்ளார். முதன்முதலாக மும்பையிலிருந்து கோவாவிலுள்ள கர்மாலி ரயில் நிலையம் வரை தேஜாஸ் பயணிக்கவுள்ளது. எல்.சி.டி திரைகளுடன் கூடிய டிவி, வைஃபை வசதி, சிசிடிவி கேமிரா என பயணிகளுக்குத் தேவையான அத்தனையும் புதிய தொழில்நுட்ப வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மணிக்கு 200 கிமீ வேகத்தில் பயணிகளுக்கு எவ்வித அசெளகரியமும் ஏற்படாமல் அதிவேகத்தில் பயணிப்பதே இதன் சிறப்பம்சமாகக் கூறப்படுகிறது.
சுமார் பத்து மணி நேரத்துக்கு பயணிக்கும் இந்த ரயிலில் பயணிக்க உணவுடன் கூடிய பயணச்சீட்டின் விலை, ஒருவருக்கு ரூ.2,940. உணவு இல்லாமல் ரூ. 2,540 என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் இந்த சொகுசு தேஜாஸ் ரயிலில் பயணிக்க இன்று முதல் முன்பதிவு துவக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment