தமிழகம் முழுவதும் 7 மாவட்ட ஆட்சியரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதேபோல், 22 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தூத்துகுடி ஆட்சியராக என்.வெங்கடேஷ், நாகை ஆட்சியராக சுரேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் ஆட்சியராக கே.எஸ்.பழனிசாமி, திருச்சி ஆட்சியராக ராஜாமணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் ஆட்சியர் ஜெயந்தி, அரியலூர் ஆட்சியர் சரவண வேல்ராஜ், பெரம்பலூர் ஆட்சியர் நந்தகுமார், நாகப்பட்டினம் ஆட்சியர் பழனிசாமி திருச்சி ஆட்சியர் பழனிசாமி, தூத்துகுடி ஆட்சியர் ரவிகுமார் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி ஆணையர் சந்தீப் நந்தூரி, நெல்லை ஆட்சியராகவும், நெல்லை ஆட்சியர் கருணாகரன், வேளாண் துறை கூடுதல் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment