RTE : இலவச கல்வி விண்ணப்ப பதிவு நாளை முடிகிறது - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, May 25, 2017

RTE : இலவச கல்வி விண்ணப்ப பதிவு நாளை முடிகிறது

RTE : இலவச கல்வி விண்ணப்ப பதிவு நாளை முடிகிறது
தனியார் நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில், எல்.கே.ஜி., முதல் 8ம் வகுப்பு வரை, இலவச கல்வி வழங்கும் திட்டத்தில் சேர, நாளையுடன்
விண்ணப்ப பதிவு முடிகிறது.
மத்திய அரசின், கட்டாய இலவச கல்வி உரிமை சட்டம் - 2005 ன் படி, தமிழகத்தில் உள்ள, தனியார் மெட்ரிக் பள்ளி களில் உள்ள, எல்.கே.ஜி., வகுப்பில், 25 சதவீத இடங்களில், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த திட்டத்தில், மாணவர்களை இலவசமாக சேர்க்க, இந்த ஆண்டு முதல், ஆன்லைன் பதிவு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஏப்., 18ல், ஆன்லைன் பதிவு துவங்கியது. மே, 20ல் முடிவதாக இருந்தது. ஆனால், பெற்றோர் கோரிக்கையை ஏற்று, அவகாசம் நீட்டிக்கப்பட்டது. கூடுதல் அவகாசம் நாளை முடிகிறது. இதுவரை, பதிவு செய்யாதோர், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், பதிவு செய்யலாம். 
மேலும் சந்தேகங்களுக்கு, மாவட்ட கல்வி அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் தேசிய தகவலியல் மையங்கள், உதவி தொடக்க கல்வி அதிகாரி மற்றும் மெட்ரிக் ஆய்வாளர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். இ - சேவை மையங்களிலும், இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

No comments:

Post a Comment